டொனால்ட் ட்ரம்ப் ஒரு பிளே பாய்.. பாலியல் சில்மிஷங்களை அம்பலப்படுத்திய பெண்கள்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க குடியரசு கட்சி, அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது பெண்கள் அடுக்கடுக்காக பாலியல் புகார்களைக் கூறி இருப்பதால், அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார், டொனால்டு டிரம்ப் (70). இவர் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார்.

டொனால்டு டிரம்ப் கடந்த 2005ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அப்போது அவர், தான், பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது ஒருவர் எதையும் செய்யலாம் என கூறி உள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியானது அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. அவர் மன்னிப்பு கேட்டபோதும், அவரது சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிராக புயல் வீசுகிறது.

74 வயது பெண்

74 வயது பெண்

இந்த நிலையில் அவர்மீது இப்போது பல பெண்கள் செக்ஸ் புகார்களை கூறி இருக்கிறார்கள். தற்போது 74 வயதான ஜெசிகா லீட்ஸ் என்ற பெண் கூறியது: எனக்கு அப்போது 38 வயது இருக்கும். நான் நியூயார்க் நகருக்கு விமானத்தில் பயணம் செய்தேன். என் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் டிரம்ப் இருந்தார். விமானம் புறப்பட்டதும், அவர் எனது இருக்கையின் கை தாங்கியை எடுத்து விட்டு, என்னை தொட ஆரம்பித்தார். அவரது கைகள் ஆக்டோபஸ் மாதிரி ஊர்ந்தன. எனது உடம்பின் எல்லா முக்கிய பாகங்களிலும் அவரது கைகள் படர்ந்தன. இவ்வாறு அவர் கூறினார்.

லிப்ட்டில் வைத்து முத்தம்

லிப்ட்டில் வைத்து முத்தம்

ரேச்சல் குரூக்ஸ் என்ற பெண் கூறியுள்ளதாவது: நான் எனது 22 வயதில், டிரம்புக்கு சொந்தமான டிரம்ப் டவர் கட்டிடத்தில் அமைந்திருந்த ரியல் எஸ்டேட் கம்பெனியில் வரவேற்பாளராக வேலை செய்தேன். அப்போது லிப்ட்டில் சென்றேன். லிப்ட்டுக்கு வெளியே நின்றிருந்த டிரம்ப் என் உதடுகளில் முத்தம் தந்து விட்டார். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெண் பத்திரிகையாளர்

பெண் பத்திரிகையாளர்

நடாஷா ஸ்டாய்னாப் என்ற பெண் பத்திரிகையாளர் கூறியுள்ளதாவது: 2005ம் ஆண்டு, டிசம்பர் மாதம் டிரம்ப் தம்பதியரின் முதலாமாண்டு திருமண நாளின்போது, அவர்களை பேட்டி காண சென்றேன். அப்போது அவர் புளோரிடா எஸ்டேட்டை எனக்கு சுற்றிக்காட்ட விரும்பினார். அதில் ஒரு பிரமாண்ட அறையும் இருந்தது. நாங்கள் அந்த அறைக்கு தனிமையில் சென்றோம். டிரம்ப் கதவை சாத்தினார். நான் திரும்பினேன். அப்போது அவர் என்னை சுவற்றில் தள்ளி கண நேரத்திற்குள் என் கழுத்தில் முத்தமிட்டு விட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மோசமான நபரா?

மோசமான நபரா?

மிண்டி மெக்கில்லிவ்ரே என்ற 36 வயது பெண் கூறியதாவது: எனக்கு அப்போது வயது 23 வயது இருக்கும். புளோரிடாவில் உள்ள மார் ஆ லாகோ கிளப்பில் வைத்து டிரம்ப் என் 'பின்புறத்தை' சட்டென கவ்வி பிடித்துக்கொண்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இப்படி டிரம்ப் மீது பெண்கள், பாலியல் புகார்களை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அந்தப் பெண்கள், அதிகாரிகளிடம் புகார் அளிக்காவிட்டாலும், தங்களுக்கு நேர்ந்தது குறித்து நண்பர்கள், உடன்வேலை பார்த்த சகாக்கள், குடும்பத்தினரிடம் பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பல்வேறு பத்திரிகைகள்

பல்வேறு பத்திரிகைகள்

நியூயார்க் டைம்ஸ், பியூப்பிள், பாம்பீச் போஸ்ட் போன்ற ஊடகங்கள் வாயிலாக தனித்தனியாக அளித்த பேட்டிகளில் இவர்கள் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1992ம் ஆண்டு வீடியோ ஒன்றில், டிரம்ப் இளம்பெண்களுடன் இருந்து கொண்டு, ஒரு பெண்ணிடம் இன்னும் 10 வருடங்களில் நான் உன்னுடன் டேட்டிங் வருவேன்.. என்று கூறி இருக்கிறார். இதை சி.பி.எஸ். நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வழக்கு தொடர முடிவு

வழக்கு தொடர முடிவு

2013ம் ஆண்டு வாஷிங்டன் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கசண்டிரா சியர்லஸ் என்ற இளம்பெண், பேஸ்புக்கில், ‘‘டிரம்ப் என் பின்புறத்தை கையால் கவ்வி பற்றிக்கொண்டு, அவரது ஓட்டல் அறைக்கு அழைத்தார்'' என கூறி இருப்பதாக மற்றொரு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த புகார்கள் அனைத்தையும் குறித்து டிரம்ப் பிரசார குழு எதுவும் கூறவில்லை. ஆனால் ஜெசிகா லீட்ஸ், ரேச்சல் குரூக்ஸ் பேட்டிகளை வெளியிட்டுள்ள ‘நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை மீது வழக்கு தொடரப்போவதாக டிரம்ப் வக்கீல்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டிரம்ப் மீதான அடுக்கடுக்கான செக்ஸ் புகார்கள், அமெரிக்க தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+