அழுது புலம்பும் ரஷ்ய வீரர்கள்.. ஒரே குழப்பம்.. பின்வாங்குகிறார்கள்.. சொல்வது பிரிட்டன் உளவுத்துறை!
கீவ்: உக்ரைனில் அழுது புலம்பும் ரஷ்ய வீரர்கள் குழப்ப மனநிலையில் தங்களது வாகனங்களை சேதப்படுத்தி போரில் பின்வாங்குகின்றனர் என பிரிட்டிஷ் உளவுத்துறை கூறியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 7வது நாளாக இன்றும் போர் தொடுத்துள்ளது. தலைநகர் கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களை இன்னும் ரஷ்ய வீரர்கள் கைப்பற்றவில்லை. கீவ் நகரை கைப்பற்ற தொடர்ந்து ரஷ்ய வீரர்கள் போராடி வருகின்றனர்.
உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்துவதால் ரஷ்ய வீரர்கள் நிலை குலைந்து போயுள்ளனர். ரஷ்யாவின் திட்டமிட்ட போர் நடவடிக்கையை உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பதற்றமான சூழல்
இருப்பினும் ரஷ்யா சற்றும் பின்வாங்கவில்லை. தொடர்ந்து போராடுகிறது. இன்று இரவு அல்லது நாளை தலைநகர் கீவ்வை நிச்சயம் கைப்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் தான் இந்திய தூதரகமும் கீவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனே வெளியேறும்படி இன்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அழுதபடி வாகனம் சேதம்
இதற்கிடையே தான் ரஷ்யாவின் ராணுவம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது போர் நடவடிக்கையால் ரஷ்ய வீரர்கள் சோர்வாகி உள்ளதாகவும், அவர்கள் புலம்பி அழுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் உக்ரைனுடன் போரை தவிர்க்க தங்களது பீரங்கி வண்டிகளை சுயமாக சேதப்படுத்தி கொள்வதாக சொல்லப்படுகிறது.

பயிற்சி இல்லாமல்...
இதற்கு போதியளவு பயிற்சி பெறாத இளம் வீரர்களை ரஷ்யா போருக்கு இறக்கியுள்ளதே இதற்கு காரணமாம். இதனால் மனதளவிலும், உடலளவிலும் தயாராகாமல் ரஷ்ய வீரர்கள் பயத்தில் உள்ளனர் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதவிர உணவு, எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பதால் சோர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்று திட்டம்
அத்துடன் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாலே அவர்கள் இன்னும் கீவ் நகரை கைப்பற்றவில்லை எனவும், 40 மைல் தொலைவுக்கு பீரங்கிகள் அணிவகுத்து நிற்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது. ஆனாலும் போர் நடவடிக்கையில் இருந்து ரஷ்யா இன்னும் பின்வாங்கவில்லை எனவும், கீவ் நகரை கைப்பற்ற மாற்று திட்டங்களை வகுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

உறுதி செய்யும் உளவுத்துறை
ரஷ்ய வீரர்களின் இந்த நடவடிக்கையை பிரிட்டிஷ் உளவுத்துறை, உளவு நிறுவனமான Shadow Break, டெய்லி மெயில் ஆகியவை வெளியிட்டுள்ள ஆடியோ உரையாடல்கள் உறுதி செய்யும் வகையில் உள்ளன. வீரர்களுக்கும், கட்டுப்பாட்டு மையத்தில் உள்ளவருக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் குழப்பமான மனநிலை இருப்பதை உரையாடல்கள் தெளிவுப்படுத்துகின்றன. மேலும் அந்த உரையாடலில் ராணுவ வீரரின் அழுகுரலும் நன்கு கேட்கிறது. இந்த குழப்ப மனநிலையால் திடீரென்று அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு துப்பாக்கி சண்டை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications