உளவு பார்க்கும் இந்தியா.. ஆனா மெயின் பிரச்சனையே இதுதான்! ஒப்புக்கொண்ட கனடா!
ஒட்டாவா: கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு சேவை (CSIS) தனது 2025 நாடாளுமன்ற அறிக்கையில், பல்வேறு விஷயங்களை தெரிவித்திருக்கிறது. கனடாவின் அரசியலில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் உளவு பார்ப்பது மற்றும் செல்வாக்கு செலுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளது. மட்டுமல்லாது காலிஸ்தானி குழுக்களின் வன்முறை தீவிரவாத செயல்பாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தலை சுட்டிக்காட்டியுள்ளது.
கனடாவின் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் அமைப்புகளிடம் மென்மையான போக்கையே கடைபிடித்து வந்திருந்தது. ஏனெனில், கனடாவில் வசிக்கும் சீக்கிய சமூகத்தினர் ஒரு குறிப்பிடத்தக்க வாக்காளர் தளமாக உள்ளனர். குறிப்பாக லிபரல் கட்சிக்கு அவர்களின் ஆதரவு முக்கியமானது என்பதால், பிரிவினைவாத சக்திகளை ட்ரூடோ அரசு பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை.

இப்படி வளர்த்து விட்டதற்கு தற்போது கனடா நன்றாக அனுபவித்த வருகிறது. CSIS அறிக்கையில் இது வெளிப்படையாக தெரிகிறது. கனடாவில் இயங்கும் காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்கள் அந்நாட்டின் பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக CSIS அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுக்கள் கனடாவில் உள்ள நிறுவனங்களைப் பயன்படுத்தி நிதி திரட்டுவதாகவும், அந்த நிதி வன்முறைச் செயல்களுக்குத் திருப்பப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது. 329 பேரைக் கொன்ற 'ஏர் இந்தியா 182' விமானக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் 40-வது ஆண்டை இந்த அறிக்கை நினைவுபடுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
இது ஒருபுறம் எனில், மறுபுறம் கனடாவின் அரசியலில் சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உளவு பார்ப்பது மற்றும் செல்வாக்கு செலுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் CSIS குற்றம் சாட்டியுள்ளது.
இந்த இரண்டு விஷயத்தையும் இந்தியா கவனத்தில் கொண்டிருக்கிறது. முன்னர் இருந்த ஜஸ்டின் அரசு, இந்தியாவை எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கும். இப்போது மார்க் கார்னி தலைமையிலான அரசின் அணுகுமுறையில் இந்தியா-கனடா உறவில் பாசிட்டிவ் மாற்றம் தெரிவதாகத் தெரிகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications