லாட்டரியை டிப்ஸாக கொடுத்த ‘குடிமகன்’: பணிப்பெண்ணுக்கு கிடைத்த ரூ.10 லட்சம் பரிசு

அமெரிக்காவின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் உள்ள ஒரு பாரில் பணிப்புரிந்து வருபவர் 25 வயதான அவ்ரோரா கெபார்ட் என்ற இளம்பெண். பொதுவாக அங்கு மது அருந்த வருபவர்கள் தங்களுக்கு மது பரிமாறுபவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில், சம்பவத்தன்று, பாருக்கு வந்த ஒரு வாடிக்கையாளர் மது அருந்திவிட்டு புறப்படும்போது, அவ்ரோராவுக்கு 'டிப்ஸ்' ஆக ஒரு லாட்டரி டிக்கெட்டை அளித்துள்ளார்.
வாடிக்கையாளர் டிப்ஸாக கொடுத்த டிக்கெட்டை வைத்து விளையாடிய அவ்ரோராவுக்கு 17 ஆயிரத்து 500 டாலர்கள் பரிசு கிடைத்தது. இது இந்திய மதிப்பில் சுமார் பத்து லட்சத்து 86 ஆயிரத்து நானூறு ரூபாய் ஆகும்.
பரிசு விழுந்த அதிர்ச்சியிலும், மனசாட்சிப்படி நடந்து கொள்ள தீர்மானித்தார் அவ்ரோரா. அதன்படி, பரிசுத் தொகையை லாட்டரி சீட்டை டிப்ஸாக அளித்த வாடிக்கையாளரிடமே திருப்பிக் கொடுக்கச் சென்றார். ஆனால், அந்த வாடிக்கையாளரோ அந்த பணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாராம்.
எதிர்பாராமல் டிப்ஸில் கிடைத்த இந்த பணத்தில் முதலில் ஒரு சோபா வாங்கவும், பின்னர் மீதி பணத்தை எதிர்காலத்திற்கான சேமிப்பாக்கவும் திட்டமிட்டுள்ளாராம் அவ்ரோரா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications