ஒழுங்கா ஹோம்வொர்க் செய்றாளான்னு பாரு.. மகளை வாட்ச் பண்ண ஸ்பெஷல் ஆளை நியமித்த அப்பா

Subscribe to Oneindia Tamil

பெய்ஜீங்: தன்னோட பொண்ணு ஹோம்வொர்க்கை சரியாக செய்றாளான்னு கண்காணிக்க வளர்ப்பு நாயை அப்பாயின்ட் பண்ணியிருக்காரு ஒரு அப்பா. இதுக்குன்னு தன்னோட வளர்ப்பு நாய்க்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் வேற கொடுத்துருக்காராம்.

குறிப்பிட்ட மாணவி ஒழுங்கா ஹோம் வொர்க் செய்றாளான்னு அந்த வளர்ப்பு நாய் கண்காணிக்கும் வீடியோ சமூக வலைதளங்கள்ல இப்போ வைரலாகி வருது. சீனாவின் குய்சோ மாகாணத்தில், வசிப்பவர் சூ லியாங். இவரது மகள் ஸின்யா. இவங்க வீட்டுல ஃபான்டுவான் அப்படின்னு பேர் வெச்சு நாய் ஒன்னு வளர்த்துகிட்டு வராங்க.

Dad Trained a Dog To Make Sure Daughter correctly Doing Homework

ஃபான்டுவானோட சின்ன வயசுல பூனை, சாப்பாட்ட எடுத்துட்டு போயிர கூடாதுன்னு அத தடுக்க பயிற்சி கொடுத்திருக்கிறார் சூ லியாங். அந்த பயிற்சியை அது வெற்றிகரமா கற்று தேர்ந்தது. ஒரு நாள் தன்னோட மகள் ஸின்யா ஹோம்வொர்க்கை சரியாக செய்யாம, மொபைல் போனை நோண்டிகிட்டும், குறும்புதனங்களை செய்தபடியும் இருக்குறத பாத்துருக்காரு சூ லியாங் . அப்போ தான்தன்னோட பொண்ண கண்காணிக்க ஃபான்டுவானுக்கு பயிற்சி கொடுத்தா என்ன என்ற ஐடியா சூ லியாங்குக்கு வந்துருக்கு.

யோசிச்சதோடு நிக்காம உடனே செயல்லயும் இறங்கிய சூ லியாங், தன் பொண்ண எப்புடி மானிட்டர் பண்ணனும்னு ஃபான்டுவானுக்கு செம்ம ட்ரெய்னிங் கொடுத்திருக்காரு. இதையும் நல்லா உள்வாங்கிகிட்ட ஃபான்டுவான், இப்போ ஸின்யாவை வாட்ச் பண்ற வேலைய பக்காவா பாக்குது.

Dad Trained a Dog To Make Sure Daughter correctly Doing Homework

ஒவ்வொரு முறையும் ஸின்யா ஹோம்வொர்க் பண்றப்போ எங்க இருந்தாலும் பாய்ஞ்சி வர ஃபான்டுவான், டேபிள் மேல மனுஷங்க கைய ஊன்றி நிக்குற மாதிரி தன்னோட கால் ரெண்டையும் ஊன்றி நிக்குது. அந்த சுட்டிப் பெண் தன்னோட ஹோம் வொர்க்கை, மொபைல் நோண்டாம வேற எதுவும் குறும்புத்தனம் செய்யாம முடிக்கிற வரை ஃபான்டுவான் சேம் பொஷிஷன்ல வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கு.

Dad Trained a Dog To Make Sure Daughter correctly Doing Homework

ஸின்யாவை ஃபான்டுவான் வாட்ச் பண்ணற வீடியோ சோஷியல் மீடியாஸ்ல செமையா ஹிட் அடிச்சு வைரலாகிட்டு வருது. ஆனா இது தொடர்பா ஸின்யா, சொல்லும் போது ஹோம்வொர்க் பண்றப்போ ஃபான்டுவான் கூட இருக்குறதுல உண்மையா எனக்கு எந்த பிரச்சனையுமே இல்ல.

என்னடா இது இப்படி தனியா ஹோம்வொர்க் பண்றோமே போரிங்கா இருக்கேன்னு தான் நா யோசிச்சு இருக்கேன். இப்போ ஃபான்டுவான் என் பக்கத்துலேயே இருக்கிறதால எனக்கு போரடிக்கல. என்னோட கவனமும் சிதறுறது இல்ல. ஒரு ஃப்ரெண்டு என் கூட இருக்குறாப்புல தான் ஃபீல் ஆகுதுன்னு ஹேப்பியா சொல்லுது.

Dad Trained a Dog To Make Sure Daughter correctly Doing Homework

இந்த ஐடியா நம்ம நாட்டு அப்பா, அம்மாக்கு வந்தா பசங்க கதி என்னாகுறதுன்னு யோசிச்சாலே சும்மா கலகலன்னு இருக்கு போங்க...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+