துபாயில் பொங்கல் விழா: கோலாகலமாக கொண்டாடிய தமிழர்கள்
துபாய்: தினத்தந்தி மற்றும் ரேடியோ சலாம் 106.5 எப்.எம். இணைந்து துபாயில் நடத்திய பொங்கல் விழாவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
துபாய் & அல் அய்ன் சாலையில் அமைந்துள்ள மர்மம் பால்பண்ணையில் மதியம் 12 மணி முதல் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பண்பலையில் விளம்பரங்கள்
துபாயில் பொங்கல் விழா நடத்தப்பட இருக்கும் செய்தி தினத்தந்தி மற்றும் ரேடியோ சலாம் 106.5 எப். எம். ஆகயவை மூலம் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.

குவிந்த தமிழர்கள்
இதனைத் தொடர்ந்து தமிழ் மொழி பேசும் மக்கள் இனம், மதம், மொழி என்ற வேறுபாடுகளைக் கடந்து தமிழர்களின் விழாவான பொங்கல் விழாவைக் கொண்டாட அலைகடலென திரண்டு வந்து ஏற்பாட்டாளர்களை வியக்க வைத்தனர்.

போட்டிகள் கோலாகலம்
இந்த விழாவினையட்டி கோலப் போட்டி, உரி அடித்தல் பொங்கல் சமைத்தல் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன.

பங்கேற்பாளர்களுக்கு பரிசு
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழா நிகழ்ச்சிகளை ரேடியோ சலாம் 106.5 எம்.எம். குழுவின் ரேவா, நிவி, அன்னி, உத்ரா, அருண்குமார் உள்ளிட்ட குழுவினர் தொகுத்து வழங்கினர்.

கலைநிகழ்ச்சிகள்
பிரபல பின்னணி பாடகர் நிகில் மேத்யூ பாடல் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். பாடல் ஆசிரியை ரேணுகா சர்மாவின் மாணவ, மாணவியர்களது கலை நிகழ்ச்சிகள் விப்ஜியார் ஈவெண்ட்ஸ் மூலம் நடைபெற்றன. பாடப்படும் பாடல்களுக்கு ஏற்ப ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

தினத்தந்தி, ரேடியோ சலாம்
தினத்தந்தி, ரேடியோ சலாம் 106.5 எம்.எம், ரேடியோ ஹலோ 89.5 எம்.எம். மற்றும் தந்தி டிவி குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications