மதநல்லிணக்கதுடன் வாழ இந்தியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்: சீனாவிற்கு தலாய்லாமா அறிவுரை
ஷில்லாங்: மதநல்லிணக்கத்துடன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை இந்தியாவிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என சீனாவிற்கு அறிவுறுத்தியுள்ளார் தலாய்லாமா.
கடந்த 1951-ம் ஆண்டு சீனா திபெத்தை ஆக்கிரமித்தது. அதனைத் தொடர்ந்து, 1959ம் ஆண்டு புத்த மதத்தலைவர் தலாய்லாமா, இந்தியாவின் தர்மசாலா பகுதிக்கு வந்து அடைக்கலமானார்.

அங்கிருந்தபடி, தொடர்ந்து திபெத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிறார் தலாய்லாமா. இந்நிலையில், முதன்முறையாக மேகாலயா தலைநகர் ஷில்லாங் சென்ற தலாய்லாமா, அங்கு நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பல்வேறு பிரதேசங்கள், பல்வேறு மக்கள், பல்வேறு மொழிகள், பலவேறு புனித நூல்கள் மற்றும் பல்வேறு பழக்கவழக்கங்களுடன் இந்தியாவில் மக்கள் மதநல்லிணக்கதுடன் வாழ்ந்து வருகின்றனர். எப்படி வாழவேண்டும் என்று இந்தியாவிடம் இருந்து சீனா கற்றுக்கொள்ள வேண்டும்.
நான் ஏற்றுக்கொண்டுள்ள இந்திய நாடு, அற்புதமான மக்கள் வாழ ஏற்ற ஒரு நல்ல நாடாகும். நாங்கள் சீனாவிடமிருந்து பிரிவினையை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சீனாவின் பொதுவான பொருளாதார முன்னேற்றம் மற்றும் நலனையே எதிர்பார்க்கிறோம்.
அமைதியான வாழ்க்கை என்கிற இந்தியாவின் குறிக்கோள், சிறந்த ஒரு ஆசியாவை உருவாக்கும். அது சிறந்த ஒரு உலகத்தை படைக்கும். 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, இந்தியா அஹிம்சை வழியை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படியே இன்றும் வாழ்ந்து வருகிறது.
இந்தியா ஒரு மதசகிப்பு தன்மை மற்றும் கலாச்சாரத்தை கொண்ட நாடாக விளங்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications