டல்லாஸிஸ் 8கே தமிழ் இசை இரவு - கானமழையில் காதை நனைக்க வாங்க!
டல்லாஸ்: அமெரிக்காவின் டல்லாஸில், டல்லாஸ் தமிழ் மன்றம் மற்றும் 8கே தமிழ் ரேடியோ சார்பில் இசை இரவு நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது.
ஜூலை 17ம் தேதி இரவு 7 மணியளவில் ரிச்சர்ட்சன் ஈஸ்மென் மையத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை 8கே ரேடியோ மற்றும் ஏடிஎம்யுஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்குகின்றன.
மேலும் 8கே தமிழ் ரேடியோ தனது தேசிய அளவிலான ஒலிபரப்பையும் அமெரிக்காவில் தொடங்குகிறது. இதன் மூலம் டல்லாஸ் தமிழ் மன்றம் தேசிய அளவில் நேயர்களைப் பெறும்.

கட்டண விவரங்கள்:
நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோருக்காக வழக்கமான கட்டணத்திலிருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டல்லாஸ் தமிழ் மன்றத்தினருக்காக 15, 25 மற்றும் 40 டாலர் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள:
இதுதொடரா்பான மேலும் தகவல்கள் மற்றும் டிக்கெட்களுக்கு முனிராஜ் 972-900-3404, கார்த்திக் நீலமேகம் 214-236-3240 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது. [email protected] என்ற ஐடிக்கு மெயில் செய்யலாம்.

சலுகைகளும் உண்டு:
இப்போதே டிக்கெட்களைப் பெற்று சலுகையையும் அனுபவியுங்கள் என்று டல்லாஸ் தமிழ் மன்றம் நேயர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

தமிழ்ப் பாடகர்களின் பாட்டு மழை:
பிரபல பாடகர்கள் ஹரிசரண், ஆலப் ராஜு, பூஜா, பிரகதி ஆகியோர், பல்வேறு பிரபமலான தமிழ்ப் பாடல்களை இந்நிகழ்ச்சியில் பாடவுள்ளனர். மேலும் இந்தியாவிலிருந்து பிரத்யேகமாக பென்னெட் மியூசிக் பேண்டும் வரவழைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினர்கள்:
"பாட்டுக்குப் பாட்டு" மற்றும் இலங்கை ரேடியோ புகழ் அப்துல் ஹமீத், பிக் மற்றும் சூரியன் எப்எம் புகழ் ஆர்.ஜே. தீனா ஆகியோரும் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். சிறப்பு நிகழ்ச்சியாக படவா கோபியின் மிமிக்ரியும் இடம் பெற உள்ளது.

காதுகளில் பாயும் கானம்:
தழிழ் ரசிகர்கள் இன்று மாலை 7 மணி முதல் இருக்கையில் அமரத் தொடங்கலாம்...நிகழ்ச்சி 7.30 மணிக்குத் தொடங்கி காதுகளை மகிழ்விக்கத் தொடங்கும்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications