நீ ஜெயிக்கனும்... "வைரல்" ஆன டென்னிஸ் வீரரின் காதலியின் வீடியோ!
லண்டன்: விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ரோஜர் பெடரர் வெல்வார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் பெடரரை அரை இறுதியுடன் அனுப்பி வைத்து ஷாக் கொடுத்தார் கனடாவின் மிலஸ் ரவோனிக். ஆனால் இறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவிடம் வீழ்ந்தார் ரவோனிக். ஆனால் ரவோனிக்கின் வெற்றிக்காக அவரது காதலி டேணியல் நட்சன் விடுத்திருந்த வீடியோ செய்தி வைரலாகி விட்டது.
காதலர் ரவோனிக்கின் முக்கியப் போட்டிகளில் அவருடன் இருக்கத் தவறாதவர் டேணியல். ஆனால் விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு அவரால் வர முடியவில்லை.
பிசியான மாடல் அழகியான டேணியல், ஒரு அசைன்மென்ட்டுக்காக போக நேரிட்டதால் விம்பிள்டன் இறுதிப் போட்டியைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

கவர்ச்சி மாடல்
உலகின் கவர்ச்சிகரமான மாடல் அழகிகளில் ஒருவராக வலம் வருகிறார் டேணியல் நட்சன். இவர்தான் மிலஸ் ரவோனிக்கின் தற்போதைய காதலி ஆவார்.

ஓருயிர் ஈருடல்
இருவரும் ஓருயிர் ஈருடலாக பழகி வருகின்றனர். ரவோனிக்கின் முக்கியப் போட்டிகளில் கண்டிப்பாக ஆஜராகி விடுவார் டேணியல். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் நான்காவது சுற்றில் வாவ்ரிங்காவை ரவோனிக் வீழ்த்திய போட்டியையும் அவர் நேரில் கண்டு ரவோனிக்கை உற்சாகப்படுத்தினார்.

பெடரர் போட்டி மிஸ்
ஆனால் விம்பிள்டன் போட்டிகளை அவரால் பார்க்க வர முடியவில்லை. குறிப்பாக பெடரரை, ரவோனிக் வீழ்த்திய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போட்டிக்கும், இறுதிப் போட்டிக்கும் அவரால் வர முடியவில்லை.

ஜெயிக்கனும் ரவோனிக்
இருப்பினும் இறுதிப் போட்டியில் ரவோனிக் வெல்ல வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோ செய்தியை அனுப்பியிருந்தார் டேணியல். அதில் உன்னால் முடியும். நான் திரையில் பார்த்து ரசிப்பேன் என்று கூறியிருந்தார் டேணியல். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போட்டியில் ரவோனிக் தோற்றுப் போய் விட்டார்.
அதனால் என்ன உலகம் முழுவதும் ரவோனிக்கைப் போலவே அவரது காதலியும் பிரபலமாகி விட்டார்.. அவரது வீடியோவும் வைரல் ஆகி விட்டது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications