மிஸ்டர் டிரம்ப்.. **** ***! அமெரிக்க அதிபரை அசிங்கமாக திட்டிய டென்மார்க் தலைவர்! பதறி போன சபாநாயகர்
பெர்ன்: கிரீன்லாந்து விவகாரம் இப்போது மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. டிரம்ப் இந்த விவகாரத்தில் பிரஷர் போடும் நிலையில், ஐரோப்பியத் தலைவர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நேரடியாகச் சாடிய டென்மார்க் எம்பி ஒருவர், சர்வதேச மேடையில் டிரம்ப்பைக் கெட்ட வார்த்தையில் திட்டியிருக்கிறார்.
டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீன்லாந்து அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து சொல்லி வருகிறார். இருப்பினும், டிரம்பின் இந்தத் திட்டத்திற்கு ஐரோப்பா முழுக்க மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

டென்மார்க் எம்பி ஆவேசம்
இதற்கிடையே அமெரிக்க அதிபர் மீதான தனது கோபத்தை வெளிப்படையாகக் காட்டியுள்ள டென்மார்க் எம்பி, ஆவேசமாக டிரம்ப்பை விமர்சித்துப் பேசும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய ஆண்டர்ஸ் விஸ்டிசென், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்று கூறினார். மேலும், டிரம்பை கெட்ட வார்த்தையிலும் திட்டி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவே இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கெட்ட வார்த்தை
38 வயதான விஸ்டிசென் மேலும் கூறுகையில், "டியர் அதிபர் டிரம்ப், மிகக் கவனமாகக் கேளுங்கள். கிரீன்லாந்து 800 ஆண்டுகளாக டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. இது ஒரு ஒருங்கிணைந்த நாடு. இது விற்பனைக்கு அல்ல" என்று திட்டவட்டமாகக் கூறினார். பிறகு சற்று கேப் விட்டு அவர், "நீங்கள் புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால்.. மிஸ்டர் அதிபர், **** ***" என்று சாடினார்.
டேனிஷ் மொழியில் அவர் தனது உரையைத் தொடர்ந்தார். அப்போது நாடாளுமன்றத் துணைத் தலைவர் நிகோலே ஸ்டெஃபானுட்டா அவரை குறுக்கிட்டு, இந்த வார்த்தைகளைக் கண்டித்தார். இப்படிப் பேசக்கூடாது என்றும் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாடினார். நிகோலே ஸ்டெஃபானுட்டா குறுக்கிட்டு, "மன்னிக்கவும், இது விதிகளுக்கு எதிரானது.
பதறிய சபாநாயகர்
இதுபோன்ற வார்த்தைகள் மற்றும் பொருத்தமற்ற மொழியைப் பேசக்கூடாது. இது குறித்துத் தெளிவான விதிகள் உள்ளன. உங்களைக் குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும். இந்த விவகாரத்தில் உங்களுக்கு வலுவான அரசியல் உணர்வுகள் இருந்தாலும், இது ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார். இருப்பினும், விஸ்டிசெனை பேச அனுமதித்தார். இதையடுத்து அவர் தனது எஞ்சிய உரையை டேனிஷ் மொழியில் தொடர்ந்தார்.
உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள ட்ரம்ப் இன்று செல்லும் நிலையில், அதற்கு ஒரு நாள் முன்பு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இன்றைய தினம் உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள டிரம்ப் சென்றுள்ளார். அங்கு அவர் கிரீன்லாந்து விவகாரம் குறித்து நிச்சயம் பேசுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரது பேச்சும் கவனிக்க வைக்கும் விஷயமாக மாறியுள்ளது.
கிரீன்லாந்து விவகாரம்
கனிம வளம் நிறைந்த கிரீன்லாந்து, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என்று ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். ஆர்க்டிக் உருகும் நிலையில், வல்லரசுகளின் பார்வை அதன் பக்கம் திரும்பியுள்ளது. இதன் காரணமாகவே சீனா அல்லது ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரிப்பதற்குள் கிரீன்லாந்து அமெரிக்கா வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என டிரம்ப் சொல்கிறார்.
இருப்பினும், டிரம்பின் திட்டத்திற்கு டென்மார்க் மட்டுமின்றி பல ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே டென்மார்க்கிற்கு ஆதரவளிக்கும் எட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு 25 சதவீதம் வரை வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் மீண்டும் அச்சுறுத்தியுள்ளார். இதனால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications