இந்த 100 வயசுப் பாட்டி சும்மா இருக்காது போலயே....ஸ்கை டைவிங்கைத் தொடர்ந்து சுறா கூண்டுக்குள் தொபுக்!
கேப் டவுன்: தனது 100வது பிறந்தநாளை ஸ்கை டைவிங் செய்து கொண்டாடிய 100 வயது பாட்டி, அடுத்ததாக சுறா கூண்டுக்குள் குதித்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேப்டவுனை சேர்ந்தவர் ஜார்ஜியானா ஹார்வுட். இவர் கடந்த 10ம் தேதி தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடினார். உலகமே தனது பிறந்தநாளைப் பற்றிப் பேச வேண்டும் என நினைத்த ஹார்வுட், கடந்த 14ம் தேதி ஓடும் விமானத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து பரபரப்பை உண்டாக்கினார்.
ஜேசன் பேக்கர் என்பவரின் துணையுடன் இந்த சாதனையை செய்த ஹார்வுட், இதற்கு முன்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு தனது 92வது வயதில் அந்நாட்டு மீட்புகுழுவினர்களுக்கு உபகரணங்கள் வாங்க நிதி திரட்டுவதற்காக ஸ்கை டைவிங் செய்திருந்தார்.

மீண்டும் சாகசம்...
இந்நிலையில், மீண்டும் ஒரு அசத்தல் சாதனையை செய்துள்ளார் ஹார்வுட். கடந்த திங்கட்கிழமையன்று கொடிய சுறா மீன்கள் உலவும் ஆபத்தான கூண்டுக்குள் லைப் ஜாக்கெட் உதவியுடன் குதித்து மேலும் ஒரு சாகசத்தை அவர் நிகழ்த்தியுள்ளார்.

ராட்சத சுறாக்கள்...
ரத்தத்தை உறைய வைக்கும் குளிரை பொருட்படுத்தாமல், ஆளை விழுங்கும் ராட்சத சுறாக்களுடன் சிறு பிள்ளைபோல் நீந்தி கும்மாளமடித்த அவர், இந்த அனுபவம் சிலிர்ப்பூட்டுவதாக அமைந்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

நிதி திரட்டும் நோக்கம்...
இந்த சாகசத்தையும் அவர் தென்னாப்பிரிக்காவின் கடல்சார் மீட்பு நிறுவன பணியாளர்களுக்கு 35 உயிர் காக்கும் உபகரணங்களை வாங்க நிதி திரட்டும் நோக்கத்திற்காகவே செய்துள்ளார். ஹார்வுட்டின் இந்த சாகச வீடியோ இணையத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

தொடரும்...
இதுவரை 16 லைப் ஜாக்கெட்களை வாங்குவதற்கு தேவையான நிதியை திரட்டியுள்ளார். எனவே, மீதமுள்ளவர்களுக்கு லைப் ஜாக்கெட்டுகள் வாங்குவதற்காக அவரது சாகசங்கள் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications