தாழப் பறந்து பாலத்தில் மோதி ஆற்றில் விழுந்த தைவான் விமானம்- அதிர வைக்கும் வீடியோ!
தைபே: தைவான் தலைநகர் தைபேவில் 53 பேருடன் சென்ற விமானம் பாலத்தின் மீது மோதி ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளான காட்சிகள் பதிவான அதிர வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த விமான விபத்தில் 31 பயணிகள் பலியாகினர்.
தைவான் நாட்டின் தலைநகர் தைபேவில் உள்ள சங்சான் விமான நிலையத்தில் இருந்து காலை டிரான்ஸ்ஏசியா ஏடிஆர் 72-600 ரக விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானிகள் இரண்டு பேர் உள்பட 58 பேர் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே பாலம் ஒன்றில் மோதி, கீலங் ஆற்றுக்குள் விழுந்தது. விமானத்தின் இடது புற இறக்கை சாலையில் சென்ற காரின் மீது மோதியுள்ளது. விமானம் விழுந்ததை அடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விமானத்தில் பயணம் செய்த 31 பேரின் உடல்கள் மீட்கபட்டன. 15 பேர் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே விமானம் விழுந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காணாமல் 12 பேரின் கதி என்ன என்பது குறித்து தெரியவில்ல்லை. விமானம் மோதிய காரில் இருந்த ஓட்டுநரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தைவானில் காலையில் நடைபெற்ற இந்தவிபத்து தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் வேடிக்கைபார்த்து கொண்டிருந்த ஒருவர் தனது செல்போன் மூலம் எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அது பார்ப்பவர்களின் நெஞ்சை அதிர வைத்துள்ளது. அந்த வீடியோவில், மிகவும் தாழ்வாக.. அதாவது சாலையில் நடந்து சென்றால் தலைக்கு மேலே உரசிச் செல்வது போல சென்ற விமானத்தின் இறக்கை ஒன்று சாலையில் செல்லும் காரின் மீது மோதிய நிலையில் பாலத்தின் மீது இடித்தபடி அப்படியே ஆற்றுக்குள் பாய்வது பதிவாகி உள்ளது.
வீடியோ காட்சி:
கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிரான்ஸ்ஏசியா விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது இதில் 48 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications