ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்களேன்... கூகுளுக்கு லெட்டர் எழுதிய பாசக்கார 4 வயது மகள்!
கலிபோர்னியா: கூகுள் நிறுவன ஊழியரான தனது தந்தைக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்த சிறுமியின் பாசத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட ஊழியருக்கு ஒரு வார கால விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது கூகுள்.

பிரபல சர்ச் எஞ்சினான கூகுளின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மகள் சமீபத்தில் அந்நிறுவனத்தின் நிறுவனரான டேனியல் ஷிப்லேகாப்பிற்கு தனது மழலை கையெழுத்தால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அச்சிறுமி கூறியிருப்பதாவது:-
"எனது தந்தைக்கு வருகிற புதன் கிழமை பிறந்த நாள். அவருடன் இணைந்து அவரது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புகிறேன். ஆனால் அவருக்கு வார விடுமுறை சனிக்கிழமை தான் வருகிறது. எனவே அவரது பிறந்த நாளின் போது அவர் என்னுடன் இருப்பதற்கு அவருக்கு நீங்கள் புதன் கிழமை விடுமுறை தரவேண்டும்' என எழுதியிருந்தார்.

சிறுமியிடமிருந்து வந்த கடிதத்தைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்த டேனியல், உடனடியாக சிறுமிக்கு பதில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர், "எங்கள் நிறுனத்தின் திறமையான ஊழியர்களுள் உன் தந்தையும் ஒருவர். அதனால் அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அந்த வாரம் முழுவதுமே விடுமுறை அளிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
தன் தந்தை மீது பாசம் வைத்துள்ள சிறுமியின் அன்பிற்கு மரியாதை அளிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் அந்த ஊழியருக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ள செய்தி அந்நாட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
மேலும், செய்தியோடு சிறுமி மற்றும் டேனியல் எழுதிய கடிதங்களும் பிரசுரமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது..
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications