ஹைதராபாத் சிக்கன், சமோசா.. இந்திய உணவுகளை சாப்பிட்டு, பிரதமர் பதவியை துறந்த டேவிட் கேமரூன்
லண்டன்: பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த டேவிட் கேமரூன் நேற்று பதவியை துறந்து விடைபெற்று செல்லும் முன்பு காரசாரமான இந்திய ஸ்டைல் உணவுகளை சாப்பிட்டுள்ளார். ஏசு கிறிஸ்துவின் 'லாஸ்ட் சப்பர்' உணவருந்திய நிகழ்ச்சியை போல இதை ஒப்பிடுகிறார்கள் பிரிட்டீஷ் குடிமக்கள்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்து செல்ல வேண்டும் என்று அந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் வாக்களித்தனர். இதையடுத்து, தனது பதவியை தானாக முன்வந்து துறந்தார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்.
கேமரூன் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சி, புதிய பிரதமராக தெரசா மே-ஐ கை காட்டியது. எலிசபெத் மகாராணியின் அனுமதியின் பேரில் இன்று தெரசா புதிய பிரதமரானார்.

இரவு விருந்து
இதனிடையே, லண்டன், 10 டவ்னிங் ஸ்ட்ரீட்டிலுள்ள, பிரிட்டன் பிரதமரின் அலுவலக வீட்டில், நேற்று இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
|
டோர் டெலிவரி
மத்திய லண்டன் பகுதியிலுள்ள 'கென்னிங்டன் தந்தூரி' (K.T) ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. உணவக ஊழியர் பைக்கில் அந்த உணவை பிரதமர் அலுவலகத்திற்கு 'டோர் டெலிவரி' செய்தார். இதை லாஸ்ட் சப்பர் உணவு என வர்ணித்து டிவிட் செய்துள்ளது அந்த ரெஸ்டாரண்ட்.

இந்திய உணவு வகைகள்
ஹைதராபாத் சஃப்ரான் சிக்கன், காஷ்மீரி ரோகன் ஜோஷ், நஷீலி கோஸ்ட், கேடி மிக்சட் கிரில் (செம்மறியாட்டு கறி மற்றும் சிக்கன் கலந்தது), சிக்கன் ஜல்ப்ராசி, சாக் ஆலூ, சாக் பன்னீர், பாலக் கோஸ்ட், வெஜ் சமோசா, நான் பிரெட் மற்றும் சோறு ஆகியவை பிரதமருக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது.

ரெகுலர் கஸ்டமர்
"1985ம் ஆண்டு கென்னிங்டன் தந்தூரி ஹோட்டல் தொடங்கப்பட்டது முதலே, பல்வேறு அரசியல் தலைவர்களின் ஃபேவரைட் ரெஸ்டாரண்டாக இது விளங்கி வருகிறது. இதற்கு முன்பும் பிரதமர் அலுவலகம் இந்த ரெஸ்டாரண்டில் ஆர்டர் செய்துள்ளது" என ஹோட்டல் நிர்வாகம் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

ரொம்ப பிடிக்கும்
டேவிட் கேமரூனுக்கு இந்திய உணவு வகைகள் என்றால் கொள்ளை பிரியம். இந்திய உணவுகள் "pretty hot" என்று அவ்வப்போது கேமரூன் கூறியுள்ளார். பிரதமர் பதவியை துறக்கும் நேரத்திலும், தனக்கு பிடித்த இந்திய ஸ்பைசி உணவுகளையே கேமரூன் விரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications