கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு... இங்கிலாந்து பிரதமரையே திணறடித்த 10 வயது இந்திய வம்சாவளி சிறுமி!
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் கேமரூனை தேர்தல் பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்டு திணறடித்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர்.
இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 7-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக அந்நாட்டு பிரதமரான டேவிட் கேமரூன் மீண்டும் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சி, சுதந்திர கட்சி என அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தேர்தலை முன்னிட்டு கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் கேமரூன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ரீமா (10) கேள்வி ஒன்றைக் கேட்டார்.
அதாவது, "உங்களைத் தவிர்த்து வேறு ஒருவர் பிரதமராக வேண்டும் என்றால் நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன் அவரை தேர்ந்தெடுப்பீர்கள்?" என்ற ரீமாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் கேமரூன் திகைத்துப் போனார்.
சில நிமிடங்கள் அமைதி காத்த கேமரூன், பின்னர், "வாவ்... இந்த கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினமானது. இந்த கேள்விக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை. காரணம் நாட்டில் நிறைய பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வேறொருவர் பிரதமராக வர வேண்டும் என்று நினைத்திருந்தால், நான் இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டேன்." என சமாளித்து பதில் அளித்தார்.
மேலும், பிரச்சாரம் முடிந்து கிளம்பும் போது "தேர்தல் பிரச்சாரத்தின் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே தலை சிறந்த கேள்வி இதுதான்" என ரீமாவைப் பாராட்டி விட்டுச் சென்றார் கேமரூன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications