தாவூத் இப்ராஹிம் எங்க நாட்ல இல்லை.. ஆதாரம் வெளியான பிறகும் அடம் பிடிக்கும் பாகிஸ்தான்!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று கூறியுள்ளார் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவாசி கலியுல்லா.
இந்தியாவால் தேடப்பட்டுவரும் தாதா, தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதற்கான தொலைபேசி உரையாடல் ஆதாரங்களை இந்திய செய்தி சேனல்கள் சில வெளியிட்ட நிலையில், இவரது பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

நிருபர்களிடம் பேசிய கலியுல்லா, "தாவூத் இப்ராஹிம் எப்போதுமே பாகிஸ்தானில் இருந்தது கிடையாது. ஆரம்பம் முதல் நாங்கள் இதைத்தான் சொல்லி வருகிறோம். இந்தியா-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தின்போது, காஷ்மீர் பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும். பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications