இங்கிலாந்தில் தாவூத் இப்ராஹிக்கு சொந்தமான ரூ.1,000 கோடி சொத்துக்களை முடக்கும் இந்தியா
துபாய்: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு இங்கிலாந்தில் உள்ள ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க உள்ளது இந்தியா.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு அமீரகத்தில் உள்ள சொத்துக்களை அங்குள்ள அதிகாரிகளின் உதவியோடு இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் தாவூதுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை இந்திய அதிகாரிகள் பெற்றுள்ளனர். தாவூதின் சொத்துக்கள் குறித்து இந்திய அதிகாரிகள் இங்கிலாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

தாவூதுக்கு மிகவும் நெருக்கமான உதவியாளர் இக்பால் மிர்ச்சி மூலம் தான் அவர் இங்கிலாந்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்தார். உலகின் பல்வேறு நாடுகளில் தாவூதுக்கு சொந்தமான 50 சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதில் இங்கிலாந்தில் உள்ள ரூ.1,000 கோடி மதிப்புள்ள 10 சொத்துக்களும் அடக்கம்.
இங்கிலாந்தில் தாவூத் கும்பலின் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் முடக்க திட்டமிட்டுள்ளது அமலாக்கத்துறை. பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து செல்லும்போது இது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச உள்ளார். அவர் வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தாவூதுக்கு மொராக்கோ, ஸ்பெயின், அமீரகம், சிங்கப்பூர், தாய்லாந்து, சைப்ரஸ், துருக்கி, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. அனைத்து சொத்துகளும் பினாமிகளின் பெயர்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications