மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் இறந்துகிடந்த பெண்: கண்டுகொள்ளாமல் சாப்பிட்ட மக்கள்
ஹாங்காங்: ஹாங்காங்கில் ஆதரவற்ற பெண் ஒருவர் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் இறந்தநிலையில் அமர்ந்திருந்ததை பார்க்காமல் பலரும் பல மணிநேரம் இருந்துள்ளனர்.
ஹாங்காங்கில் உள்ள பிங் ஷெக் மாவட்டத்தில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு ஆதரவற்ற பெண் ஒருவர் சென்றுள்ளார். அவர் உணவகத்தில் உள்ள இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தபோது இறந்துவிட்டார். 24 மணிநேரமும் செயல்படும் அந்த உணவகத்தில் அவர் இறந்து டேபிளில் சாய்ந்தபடி இருந்தது தெரியாமல் பலரும் அவரை சுற்றி அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

அவர் இறந்தபடியே 24 மணிநேரம் அங்கு இருந்துள்ளார். சனிக்கிழமை காலை உணவகத்திற்கு சாப்பிட வந்த பெண் ஒருவர் ஆதரவற்ற பெண் அசையாமல் இருந்ததை பார்த்து அவர் மயங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்த்தபோது அந்த பெண் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
வீடு இல்லாத அந்த பெண் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் இரவு பொழுதை கழிப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். அந்த பெண்ணிற்கு 50 முதல் 60 வயது வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து ஹாங்காங் மெக்டொனால்ட்ஸ் மூத்த டைரக்டர் வென்டி லாம் கூறுகையில்,
பிங் ஷெக் எஸ்டேட் உணவகத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து எங்களின் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். யார் வேண்டுமானாலும் எங்கள் உணவகத்திற்கு எந்த நேரத்திலும் வரலாம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications