பெனாசிர் படுகொலைக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடந்த மிகப் பயங்கரமான தாக்குதல் இதுதான்!
இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலைக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடந்த மிகப் பயங்கரமான தீவிரவாதத் தாக்குதல் நேற்று நடந்த பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதல்தான்.
பெஷவார் ராணுவப் பள்ளிக்கூடத்தில் புகுந்து பாகிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தாக்குதல் ஈர மனம் கொண்ட நெஞ்சங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பரிதாபமாக இறந்து போன குழந்தைகளுக்காக மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இதயமே இல்லாத பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தும் கொடும் தாக்குதல்கள் தொடர் கதையாகி வருவது என்னவோ நிற்காமல் தொடரவே செய்கிறது.

பெனாசிர் படுகொலை
கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். கராச்சியில் நடந்த ஊர்வலத்தின்போது நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி பெனாசிர் உள்பட 130 பேர் கொல்லப்பட்டனர். அதையும் தாலிபான்கள்தான் நடத்தியதாக கூறப்பட்டது.

லாகூர் மசூதித் தாக்குதல்
2010ம் ஆண்டு மே 28ம் தேதி லாகூரில் உள்ள அகமதி இஸ்லாமிக் பிரிவு மசூதிகள் இரண்டு குறி வைத்துத் தாக்கப்பட்டன. இதில் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

குவெட்டா தாக்குதல்
அதேபோல கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி குவெட்டா நகரில் ஹஸரா ஷியா முஸ்லீம் மக்கள் மீது நடந்த பயங்கர தாக்குதலில் 120 பேர் கொல்லப்பட்டனர்.

பெஷாவர் சர்ச்சில் கிறிஸ்துவர்கள் மீது
கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி பெஷாவரில் உள்ள ஒரு சர்ச்சில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்களை தலிபான் தீவிரவாதிகள் கொடூரமாக தாக்கியதில் 80 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

நேற்று நடந்த கொடும் தாக்குதல்
அதே பெஷாவரில்தான் நேற்று நடந்த தாலிபான் தாக்குதலில் 141 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 132 பேர் குழந்தைகள் என்பது கொடுமையானது, வேதனையானது.

அப்பாவிகளைக் குறி வைப்பது தாலிபான் ஸ்டைல்
பாகிஸ்தானில் அப்பாவி மக்களை, அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்துவதை தாலிபான்கள் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications