அமெரிக்காவில் மீண்டும் கடும் பனிப்புயல்: 6 பேர் பலி - ஜார்ஜியாவில் அவரச நிலை பிரகடனம்
வாஷிங்டன்: ஏற்கனவே தாக்கிய கடும் பனிப்புயல் பாதிப்பிலிருந்து இன்னும் அமெரிக்கா மீண்டுவராத நிலையில், மீண்டும் அங்கு கடுமையான பனிப்புயல் வீசத் தொடங்கியுள்ளது. இந்தப் பனிப்புயலில் சிக்கி இதுவரை ஆறு பேர் பலியானதாகச் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த மாதம் தொடங்கி அவ்வப்போது பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயலின் தாக்கத்தால் அப்பகுதிகளில் 6 அங்குலம் உயரத்துக்கு பனி கொட்டியது. இதனால் கடந்த சில வாரங்களாக மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இந்தக் கடும் பனிப்புயலில் சிக்கி இருபதுக்கும் அதிகமானோர் பலியானார்கள். போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்தார்கள்.
இதற்கிடையே கடந்த சில தினங்களாக பனிப்புயலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. ஆனால், மீண்டும் ஒரு பனிப்புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

மீண்டும் பனிப்பியல்....
இந்நிலையில், நேற்று வீசிய பனிப்புயலில் அமெரிக்காவின் தெற்கு பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டது. மழையோடு, பனிக்கட்டிகளும் சேர்ந்து விழுந்தது. இந்தக் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. பனிப்புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாயும் வாய்ப்பும், மின்சேவை பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

6 பேர் பலி....
இதுவரை பனிப்பொழிவு காரணமாக நடந்த பல்வேறு சம்பவங்களில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், வடக்கு ஜார்ஜியாவில் இன்று 6 முதல் 10 அங்குல அளவுக்கு பனிப்படலங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவசர நிலைப் பிரகடனம்....
பனிப்புயலின் தாக்குதலால், ஜார்ஜியாவில் நிலைமை மோசமாக உள்ளதால் அதிபர் ஒபாமா அங்கு நெருக்கடி நிலையை அமல்படுத்தி உள்ளார். அலபாமா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, மிஸ்சிசிப்பி மாகாண கவர்னர்கள் வானிலை நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளனர்.

விடுமுறை...
ஜார்ஜியா கவர்னர் நாதன் டீல், அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களை நேற்று ஒரு நாள் மட்டும் மூட உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
