திரண்டு வந்த எதிர்க்கட்சிகள்.. உறுதியான கூட்டணி.. நீக்கப்படும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.. திருப்பம்
டெல் அவிவ்: இஸ்ரேலின் காபந்து பிரதமராக இருக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. பெரும்பான்மை இல்லாமல் மைனாரிட்டி அரசாக காபந்து ஆட்சி நடத்தி வந்த பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளது.
Recommended Video
12 வருடமாக இஸ்ரேலின் பிரதமராக நீடித்து வந்த வலதுசாரி தலைவர்... பெஞ்சமின் நெதன்யாகுவின் அதிகாரம் இஸ்ரேலில் முடிவிற்கு வருகிறது. அங்கு நெதன்யாகுவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் திரண்டு வந்து இருக்கின்றன.
வலதுசாரி கட்சி, தீவிர வலதுசாரி கட்சி, மய்ய கட்சி, அரபு ஆதரவு கொண்ட கட்சி என்று எல்லா விதமான கட்சிகளும் உள்ளன. மொத்தமாக நெதன்யாகுவை பதவியில் இருந்து தூக்க கட்சிகள் ஒன்று திரண்டு உள்ளன.

திணறல்
இஸ்ரேலில் கடந்த 2 வருடமாக உறுதியான ஆட்சி அமைக்க முடியாமல் அங்கிருக்கும் கட்சிகள் திணறி வருகின்றன. இதுவரை 4 தேர்தல்கள் இரண்டு வருடத்தில் நடந்து முடிந்துவிட்ட நிலையில், அங்கு எந்த கட்சியும், கூட்டணியும் பெரும்பான்மை பெற்று முழுமையான ஆட்சி அமைக்க முடியவில்லை. நான்கு முறையும் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. அவர் கட்சியின் கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை.

ஊழல்
முக்கியமாக பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக பல்வேறு ஊழல் புகார்கள், குற்றச்சாட்டுகள், மோசடி புகார்கள் நிலுவையில் உள்ளன. இவருக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளன. கடைசியாக நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு காபந்து பிரதமராக தொடர்ந்தார்.

அவகாசம்
இஸ்ரேலில் ஆட்சி அமைக்க 120 இடங்களில் 61ல் வெல்ல வேண்டும். கடைசி தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 31 இடங்களில் மட்டுமே வென்றது. அவரின் கூட்டணி 54 இடங்களில் வென்றது. இதையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 28 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த அவகாசம் நேற்றோடு முடிந்த நிலையில், எதிர்கட்சிகள் கூட்டணியை நேற்று உறுதி செய்துள்ளது. பல்வேறு கொள்கைகள் கொண்ட, கொள்கைகள் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத காட்சிகள் பெஞ்சமின் நெதன்யாகு

எப்படி அமைத்தார்
அங்கு பிரதான எதிர்க்கட்சியான யாஷ் அடிட் கட்சிதான் இந்த கூட்டணி உருவாக காரணம். இதன் தலைவர் யார் லாபிட்தான் இந்த கூட்டணியை முன்னின்று உருவாக்கிய நபர். தீவிர இடதுசாரி கட்சியான யாமினாவின் தலைவர் பென்னட் ஆதரவு அளித்துள்ளார். இதனால் எதிர்க்கட்சி கூட்டணிக்கு 66 இடங்கள் உள்ளன. நேற்று இவர்களின் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த வாரம்
இதையடுத்து இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் தொடக்கத்தில் எதிர்க்கட்சி கூட்டணி, பாராளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை அமைக்கும். இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் பென்னட் 2 வருடமும், லாபிட் கடைசி 2 வருடமும் பிரதமராக இருப்பார்கள். அடுத்த வாரம் நடக்கும் பாராளுமன்ற கூட்ட தொடருக்கு பின் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமர் பதவியை இழப்பார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications