வடகொரியாவில் Squid Game வெப் சீரிஸை பரப்பியவருக்கு.. அதே பாணியில் மரண தண்டனை.. கிம் ஜோங் உத்தரவு!
பியாங்யாங்: வடகொரியாவில் Squid Game வெப் சீரிஸை பரப்பியவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உலகில் கடுமையான சட்டங்கள் இருக்கும் நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அங்கு சமூக வலைத்தளங்கள் கிடையாது. அரசுக்கு எதிராக பேச முடியாது.
சினிமா, பாடல்களுக்கு வடகொரியாவின் அனுமதி இல்லை. வெளி உலகில் இருந்து தனித்துவிடப்பட்டு இருக்கும் ஒரு நாடுதான் வடகொரியா.

வடகொரியா
ஆனால் அருகிலேயே இருக்கும் தென் கொரியா அப்படி இல்லை. பிடிஎஸ் பாய்ஸ், கொரிய படங்கள், தொடர்கள், அனிமேஷன் படங்கள் என்று தென் கொரியா இன்னொரு அமெரிக்கா போன்ற கலாச்சாரத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறது. தென் கொரியாவை பார்த்து அதை போல பாடல், படங்களை பார்த்தவர்களுக்கு வடகொரியாவின் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

குற்றவாளி
அந்த வகையில்தான் வடகொரியாவில் Squid Game வெப் சீரிஸை பரப்பியவருக்கு அதே பாணியில் மரணம் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் தென் கொரியாவில் உருவாக்கப்பட்டு சமீபத்தில் நெட் பிளிக்சில் ஹிட் அடித்த தொடர் ஆகும். அந்த தொடரில் முதல் கேமில் மைதானத்தில் ஓடும் போது போட்டியாளர்களை சுடுவார்கள். அப்படித்தான் நிஜத்தில் இவரை ஓடவிட்டு சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா
வடகொரியாவுக்கு திருட்டுத்தனமாக Squid Game தொடரை எடுத்து வந்து அதை பென் டிரைவில் காப்பி செய்து தனது கல்லூரி நண்பர்களுக்கு அந்த நபர் கொடுத்துள்ளார். சீனாவில் இருந்து Squid Game தொடரை பென் டிரைவில் வடகொரியாவுக்கு அவர் கொண்டு வந்துள்ளார். கல்லூரி ஒன்றில் அவர் மூலம் இந்த தொடர் சக மாணவர்கள் இடையே பரப்பபட்டு உள்ளது.

கைது
இந்த சம்பவம் வெளியே தெரிந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இவர் யாருக்கெல்லாம் காப்பி கொடுத்தாரோ அவர்களை எல்லாம் தேடிக்கண்டுபிடித்து கைது செய்தனர். இதையடுத்து Squid Game தொடரை பரப்பிய அவருக்கு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் மரண தண்டனை அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவின் பெயரில் வழங்கப்பட்டது.

Squid Game
இன்னொரு மாணவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. படங்களை பார்த்த மற்றவர்களுக்கு சித்திரவதைகள் அடங்கிய 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications