மொசாம்பிக்கில் கிடைத்த பாகங்கள் மாயமான மலேசிய விமானுத்தினுடையதாக இருக்கும் வாய்ப்பு அதிகம்: ஆஸி.
பெர்த்: மொசாம்பிக்கில் கிடைத்த 2 பாகங்கள் 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.

தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆண்டுக்கணக்கில் ஆஸ்திரேலியா தலைமையிலான குழு தேடியும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் மொசாம்பிக்கில் கரை ஒதுங்கிய 2 விமான பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவை ஆய்வுக்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாயமான விமானம் போயிங் 777 ரகத்தை சேர்ந்தது என்பதால் விமான பாகங்கள் ஆய்வில் ஆஸ்திரேலியா, மலேசியா நிபுணர்களுடன் போயிங் நிறுவன நிபுணர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மொசாம்பிக்கில் கிடைத்த பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆஸ்திரேலிய அரசு இன்று அறிவித்துள்ளது.
இதற்கிடையே அகழ்வாராய்ச்சி நிபுணரான நீல்ஸ் க்ரூகர் என்பவர் தென்னாப்பிரிக்காவின் மொஸ்ஸல் பே நகர் அருகில் உள்ள கடற்கரையோரம் கிடந்த விமான பாகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அது விமானத்தின் என்ஜின் பாகம் ஆகும். அதை அவரிடம் இருந்து வாங்கி வர குழு ஒன்றை தென்னாப்பிரிக்காவுக்கு மலேசியா அனுப்ப உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications