துபாயில் நடந்த கார்ஸ் பிரிமியர் லீக் 2014: கோப்பையை வென்ற தேரா வொர்க்ஷாப் வாரியர்ஸ்
துபாய்: துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனம் நடத்திய கார்ஸ் பிரிமியர் லீக் 2014 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த 28ம் தேதி அஜ்மான் அஸ்கான் ஃபார்ம் வொர்க் டிவிஷன் கிரவுண்டில் நடைபெற்றது.
ஊழியர்களை உற்சாகப்பட்டுத்தும் விதமாக நான்காவது ஆண்டாக இந்த கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஷார்ஜா சிட்டி சேலஞ்சர்ஸ், வெஸ்டர்ன் ரிபெல்ஸ், தேரா வொர்க்ஷாப் வாரியர்ஸ், ஃபுஜைரா சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியில் தேரா வொர்க்ஷாப் வாரியர்ஸ் இறுதிப் போட்டியில் வெஸ்டர்ன் ரிபெல்ஸ் அணியினை 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கார்ஸ் பிரிமியர் லீக் 2014க்கான கோப்பையினை வென்றது.

கார்ஸ் குழும பொது மேலாளர் வலித் அல் அமீன் தத்தை, பொது மேலாளர் நிதீன் கந்வலே, துணைப் பொது மேலாளர் ஹபிபுல்லா, மனிதவள மேம்பாட்டுத்துறை துணைப் பொது மேலாளர் காதர் மொஹிதீன், துணைப் பொது மேலாளர் முஹம்மது ஹுசைன், மேலாளர் டாம்னிக் உள்ளிட்டோர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
தேரா வொர்க்ஷாப் வாரியர்ஸுக்கு வெற்றிக் கோப்பையினை கார்ஸ் குழும பொது மேலாளர் வலித் அல் அமீன் தத்தை வழங்கினார்.

அஸ்கான் மேலாளர் டொனால்டுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கார்ஸ் குழும பொது மேலாளர் வலித் அல் அமீன் தத்தை தனது தலைமையுரையில் அனைத்து ஆட்டக்காரர்களையும் ஏற்பாட்டாளர்களையும் பாராட்டினார்.
நலத்துறை அலுவலர் அப்துல் கனி நன்றி கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications