அமெரிக்கா தாக்குதல் வெனிசுலாவில் 40 பேர் பலி.. இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்
வெனிசுலா: வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்க நாட்டால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அமெரிக்கா அவரை சிறைபிடித்துள்ளது. அவர் சிறைபிடிக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, இனிமேல் வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வெனிசுலாவுக்கு இடைக்கால அதிபர்
வெனிசுலாவில் வான்வழி தாக்குதல் நடத்தி நிகோலஸ் மற்றும் அவரின் மனைவியை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. இது அந்த நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. நிகோலஸ் மதுரோ நாடு கடத்தப்பட்டுள்ளார். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த தாக்குதலில் வெனிசுலா மக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து மதுரோ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்த நாட்டின் அரசு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்து வரும் டெல்சி ரோட்ரிக்ஸ், அந்த நாட்டின் எண்ணெய் வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை கண்காணித்து வருகிறார்.
யார் இந்த டெல்சி ரோட்ரிக்ஸ்
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அவர் வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்துள்ளார். 56 வயதான டெல்சி ரோட்ரிக்ஸ் வழக்கறிஞர் ஆவார். அவர் வெனிசுலா நாட்டின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றவர். மதுரோவுக்கு மிகவும் நெருக்கமானவர். வெனிசுலா அரசியலமைப்பு சட்டப்படி அவர் இடைக்கால அதிபராக நியமிக்கப்படுவதாக உச்ச நீதின்றம் கூறியுள்ளது. அவரின் தலைமையில் வெனிசுலா - அமெரிக்கா பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என்று அந்த நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
-
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications