கொள்ளை கூட்டத்தின் தலைவனான போலீஸ்... 6 மாதத்தில் டான் ஆனது எப்படி?
6 மாதம் முன்பு காணாமல் போன டெல்லி போலீஸ் ஒருவர் பெரிய கொள்ளை கூட்டம் ஒன்றை உருவாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: டெல்லி குற்றப்பிரிவில் மிக முக்கிய அதிகாரியாக வலம் வந்த 'அஸ்லுப் கான்' என்ற போலீஸ்காரர் 6 மாதங்களுக்கு முன்பு திடீர் என்று காணாமல் போனார். போலீசார் இவரை பல நாட்களாக தேடி வந்தனர்.
தற்போது இவர் பெரிய கொள்ளை கூட்டத்திற்கு தலைவராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் நடந்த முக்கியமான பல ஏடிஎம் கொள்ளைகளுக்கு பின் இந்த குழு இருந்து செயல்பட்டுள்ளது.
கேரளாவில் வேறு ஒரு குற்றத்தின் விசாரிக்க சென்ற போலீசார் இந்த குற்றத்தை கண்டுபிடித்து உள்ளனர். போலீஸ் ஒருவரே இவ்வளவு பெரிய டானாக உருவெடுத்த சம்பவம் மொத்த காவல்துறையையும் அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது.

காணாமல் போன போலீஸ் அதிகாரி
டெல்லி குற்றப்பிரிவில் முக்கியமான தலைமை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார் அஸ்லுப் கான். இவர் சரியாக எட்டு மாதங்களுக்கு முன்பு 20 நாள் விடுப்பு கேட்டு வீட்டிற்கு சென்றார். சரியாக ஒருமாதம் முடிந்த பின் மீண்டும் 20 நாள் விடுப்பு கேட்டு இருந்தார். ஆனால் இரண்டு மாதம் முடிந்த பின்பும் அவர் தனது பணிக்கு திரும்பவில்லை. ஆறுமாதம் போலீசார் அவரை தேடி இருக்கின்றனர். அவர் பணிக்கு திரும்பாததால் அவரை பணி இடை நீக்கம் செய்தனர்.

கேரள போலீஸ் விசாரணை
கேரளாவில் நடந்த தொடர் ஏடிஎம் கொள்ளைகளை தடுப்பதற்காக அங்கு சிறப்புப்படை அமைக்கப்பட்டது. நேற்று அந்த படை சுரேஷ் என்ற நபரை திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்தது. அவரை தீவிரமாக நேற்று போலீசார் விசாரணை செய்தனர். அப்போது சுரேஷ் , ''அஸ்லுப் கான்தான் எங்கள் கூட்டத்தின் தலைவர்'' என்று கூறியிருக்கிறார். மேலும் அஸ்லுப் கான் டெல்லி போலீசில் இருந்த கதை, அவர் காணாமல் போனது எல்லாவற்றையும் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

கொள்ளை கூட்டம்
இந்த தகவல் டெல்லி போலீசாருக்கு அளிக்கப்பட்டது. அதன்படி நடந்த விசாரணையில் அஸ்லுப் கான் விடுமுறையில் வந்த பின் தனக்கு தெரிந்த நபர்களை வைத்து இந்த கொள்ளை கூட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார். மேலும் இவர்கள் தொடர்ந்து பல இடங்களில் ஏடிஎம் மையங்களை கொள்ளை அடிப்பதை வாடிக்கையாக வைத்து இருந்துள்ளனர். இவர்களின் குழுவில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் இருந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கூட கொள்ளை
இந்த குழு இந்திய முழுக்க 15 மாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் கொள்ளை அடித்துள்ளது. இவர்கள் கொள்ளை அடித்த மதிப்பு பல கோடிகளை தாண்டும் என கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இவர்கள் தமிழ்நாட்டிலும் பல மாதங்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலியில் கொள்ளை அடித்துள்ளனர்.

எப்படி செயல்பட்டார்கள்
இதற்காக அஸ்லுப் கான் மிகப்பெரிய திட்டங்களை வகுத்து இருக்கிறார். ஏடிஎம் நிலையத்திற்கு அருகில் ரூம் எடுத்து ஆள் இல்லாத நேரங்களை கண்காணித்து இருக்கிறார். பல இடங்களில் இவரது போலீஸ் ஐடி கார்டை காட்டி இலவசமாக தங்கி உள்ளார். மேலும் கேரளா போலீசிடமே பல முறை இவர் ஐடி கார்டை காட்டி எஸ்கேப் ஆகியுள்ளார். தற்போது டெல்லி போலீஸ் இவரை விசாரணைக்காக அழைத்து சென்று இருக்கிறது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications