கார் விபத்தால் 6 நாட்கள் காட்டில் சிக்கிய பெண்.. உயிரைக் காப்பாற்ற சிறுநீர் குடித்த பரிதாபம்!
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நடுக்காட்டில் சிக்கிய பெண் ஒருவாரம் சிறுநீர் பருகியது தெரிய வந்துள்ளது.
Recommended Video

சிட்னி: விபத்தால் சுமார் ஆறு நாட்கள் காட்டிற்குள் மாட்டிக் கொண்ட பெண் ஒருவர், தன் சிறுநீரையே தாகத்திற்கு தண்ணீராக உட்கொண்டு உயிர் பிழைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் புரூக் பிலிப்ஸ்(40 ) என்ற பெண். கடந்த மாதம் இவர் பயணம் செய்த கார் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது. இதில், காரோடு உருண்டு சென்று நடுக்காட்டில் சிக்கினார் புரூக். மனித நடமாட்டமே இல்லாத அப்பகுதியில் இருந்து எப்படி தப்பித்து வெளியில் செல்வது என அவருக்குத் தெரியவில்லை.

இதனால் தன்னைக் காப்பாற்ற யாராவது வரும் வரை எப்படியும் இந்தக் காட்டிற்குள் வாழ வேண்டும் என அவர் முடிவு செய்தார். காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதோடு, தினமும் தனக்கான உணவை உருவாக்குவதும் அவருக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.
விபத்தில் சிக்கிய காரில் இருந்த பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களும், மழை நீரும் முதல் சில நாட்களுக்கு உதவின. அதற்குப் பிறகு அவருக்கு உணவு மற்றும் தண்ணீருக்கு வழியில்லாமல் போனது. இதனால் தனது சிறுநீரையே தாகத்திற்குப் பருக ஆரம்பித்தார்.
இதற்கிடையே காரில் சென்ற புரூக்கைக் காணவில்லை என அவரது குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். இதில் அவரது கார் விபத்தில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் அவர் காட்டில் இருந்து மீட்கப்பட்டார்.
காட்டிற்குள் சிக்கிக் கொண்ட பொதும், சமயோஜிதமாகச் செயல்பட்டு தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்ட புரூக்கை மீட்புப் படையினர் பாராட்டியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications