
"பப்லு பிரித்திவிராஜ் போல.." காதலுக்கு வயது இல்லைங்க! 56 வயது பெண்ணை மணக்கும் 19 வயது பையன்!
பாங்காக்: காதலுக்குக் கண் இல்லை என்று பொதுவாகச் சொல்வார்களே அப்படியொரு விநோதமான காதல் கதை தான் இந்த இருவருக்குள் மலர்ந்து உள்ளது.
ஒருவருக்கு எப்போது யார் மீது காதல் வரும் என யாருக்கும் தெரியாது. அனைத்து விதமான கட்டுப்பாடு, வேறுபாடுகளைக் கடந்தும் காதல் என்பது வரும் என்பதே இங்கு அனைவரும் பொதுவாகச் சொல்லும் கருத்து.
சமீபத்தில் 55 வயதான பிரபல நடிகர் பப்லு பிரித்திவிராஜ் கூட 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இருந்தார். அதேபோன்ற ஒரு காதல் கதை தான் இப்போது தாய்லாந்தில் நடந்துள்ளது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் பயிலரங்கம்! 2 நாட்களாக பாடம் எடுத்த முக்கியப் பிரமுகர்கள்!

தாய்லாந்து
தாய்லாந்து நாட்டில் 19 வயதே ஆன டீனேஜ் இளைஞர் ஒருவன் தன்னை விட 37 வயது பெரிய பெண்ணை ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். காதல் என்றால் சும்மா இல்லை. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துவிட்டனர். இதற்காக நிச்சயதார்த்தம் கூட நடந்து விட்டதாம். 19 வயதான வுத்திச்சாய் சந்தராஜ் என்ற அந்த இளைஞர் 56 வயதான தனது காதலி ஜன்லா நமுவாங்ராக்கை ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார்.

10 வயதில்
அதாவது தனது வருங்கால மனைவியை சந்தராஜ் தனது 10 வயதில் முதலில் பார்த்துள்ளார். வடகிழக்கு தாய்லாந்தின் சகோன் நகோன் மாகாணத்தில் இருவரும் வசித்து வந்துள்ளனர். ஜன்லாவுக்கு ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டைச் சுத்தம் செய்யப் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சந்தராஜ் உதவியைக் கேட்டுள்ளார் இந்த பெண்.

டேட்டிங்
இப்படியே தொடர்ந்து ஜன்லாவுக்கு உதவியுள்ளான் அந்த டீனேஜ் இளைஞன். அப்படியே இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு உள்ளது. அந்த நட்பு மெல்லக் காதலாகவும் மலர்ந்து உள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்து உள்ளனர். இருவருக்கும் 37 வயது வித்தியாசம் இருக்கும் போதிலும், அதைப் பற்றி அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பொது இடங்களிலும் அவர்கள் காதலர்களை என்பதைக் காட்டத் தவறுவதில்லை.

காதல்
டேட்டிங் செல்லும் இடங்களில் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டு, கைகளைப் பிடித்துக் கொள்ளவும் தவறுவதில்லை. இது தொடர்பாக சந்தராஜ் கூறுகையில், "கடந்த இரு ஆண்டுகளாக ஜான்லாவுடன் உறவில் இருக்கிறேன். ஜான்லா ஒரு கடின உழைப்பாளி. மிகவும் நேர்மையான நபரும் கூட..! அவர் இப்போது மோசமான வீட்டில் வசிக்கிறார். அதை மாற்ற வேண்டும். அவர் வசதியாக வாழ வேண்டும்.

முதலில் சீக்ரெட்
எனது வாழ்க்கையில் முதல்முறையாக ஒருவரை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் என்றால் அது இவரைப் பார்த்துத் தான்" என்று கூறி வெட்கப்பட்டுச் சிரிக்கிறார். இருவரும் டேட்டிங் செல்ல தொடங்கிய போது, இந்த உறவை அவர்கள் ரகசியமாகவே வைத்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இது குறித்துக் கூறியுள்ளனர்.

யார் இந்த ஜான்லா
ஜான்லா 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விவகாரத்து செய்து இருந்தார். அவர்கள் இருவரும் 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். அவர்களுக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வயது வித்தியாசத்தைத் தாண்டி இப்போது இவர்களுக்குள் காதல் மலர்ந்து உள்ளது. இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் பிளான் போட்டுள்ளது.

திருமணம்
இது குறித்து ஜான்லா மேலும் கூறுகையில், "சந்தராஜ் எனக்கு ஒரு சூப்பர் ஹீரோ போல. தினமும் எனக்கு உதவி செய்தான். அவன் வளர்ந்ததும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை மற்றவர்களிடம் சொன்ன போது.. எங்களைப் பைத்தியம் என்றே நினைத்தார்கள். எனது குழந்தைகளும் கூட அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும், சந்தராஜ் என்னை மீண்டும் இளமையாக்குகிறான். நிச்சயம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம்" என்கிறார்.