நிரந்தர அஞ்சலி... ராபின் வில்லியம்ஸ் முகத்தை தொடையில் டாட்டூ குத்திய தீவிர ரசிகை

கடந்த வாரம் காலமானார் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ். அவரது மிகப்பெரிய ரசிகை என தன்னை பெருமையுடன் கூறிக்கொள்ளும் அப்பெண், ராபினின் முகத்தை பெரிய அளவில் வண்ண மயமாக தனது தொடையில் பச்சை குத்தியுள்ளார்.
அந்தப் பெண்ணின் பெயர் ஹேய்லி பேட்டர்சன். 23 வயதாகும் ஹேய்லி, ராபின் மறைவுக்கு முன்னதாகவே இப்படி பச்சை குத்தி, அதை புகைப்படம் எடுத்து ராபினுக்கு அனுப்ப அவர் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அதற்குள் ராபின் இறந்து போய் விட்டார் என கவலை தெரிவித்துள்ளார் ஹேய்லி.
மேலும், இது குறித்து ஹேய்லி கூறியதாவது :-
என் ஹீரோ...
ராபின் வில்லியம்ஸ்தான் நான் சிறு குழந்தையாக இருந்தது முதலே எனது ஹீரோ. இப்போதும் கூட அவர் மட்டுமே எனக்கு மிகவும் பிடித்தமானவர்.
புகைப்படம் எடுக்க திட்டம்...நான் இதை புகைப்படம் எடுத்து ராபினுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவர் மரணமடைந்து விட்டார்.
நிரந்தர அஞ்சலி...
இப்போது எனது தொடையில் எனது மனம் கவர்ந்த ஹீரோவை பச்சை குத்தியுள்ளேன். இது அவருக்கான நிரந்தரமான அஞ்சலியாக மாறியுள்ளது என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பச்சைக் குத்திய கலைஞர்...
வெஸ்லி லேம்பே என்பவர்தான் ஹேய்லிக்கு பச்சை குத்தியவர். ஹாம்ப்ஷயரில் உள்ள அவரது பச்சை குத்தும் மையத்தில் வைத்து இதைப் பொறித்துள்ளார்.
ஹூக் பட கேரக்டர்...
1991ல் வெளியான ஹூக் என்ற படத்தில் இடம் பெற்ற ராபின் கேரக்டரையே தனது தொடையில் பச்சை குத்தியுள்ளார் இப்பெண்.
250 பவுண்டுகள் செலவு...
எட்டு இன்ச் அளவில் இந்த பச்சை குத்தப்பட்டுள்ளது. இதற்கு அவருக்கு 250 பவுண்டுகள் செலவானதாம். சில மணி நேரங்களில் பச்சை குத்தி முடித்து விட்டனராம்.
ராபினுக்காக...
ஆனால் பச்சை குத்திய பின்னர் சுமார் 20 நிமிடங்கள் நல்ல வலி எடுத்து விட்டதாம். ஆனாலும் ராபினுக்காக அதைப் பொறுத்துக் கொண்டாராம் இப்பெண்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications