மியாமி மாலில் விசிட் அடித்த அயலான்கள்? வானத்தில் இருந்து இறங்கிய ஏலியன்? போலீஸ் குவிந்ததால் ஷாக்

Subscribe to Oneindia Tamil

மியாமி: அமெரிக்காவில் ப்ளோரிடாவில் உள்ள மியாமியில் இருக்கும் மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியாகும் செய்திகள் இணையத்தை உலுக்கி உள்ளன.

10 அடி உயரமுள்ள வேற்றுகிரக ஏலியன் ஒன்று மியாமி ஷாப்பிங் மாலில் சுற்றித் திரிந்ததாக புகார்கள் வந்ததால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Did aliens really visit Miami Mall? What did Police gathered there in huge numbers?

பேசைட் மார்க்கெட்பிளேஸுக்கு வெளியே ஒரு பெரிய உருவம் உலா வருவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகளால் சூழப்பட்ட அந்த மாலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழப்பம்: அதேபோல் அந்த மாலுக்கு மேலே ஏலியனின் வாகனங்கள் என்று கூறப்படும் யுஎப்ஓ போன்ற பறக்கும் தட்டுகளின் வெளிச்சங்கள் தென்பட்டதும் வீடியோவாக வெளியாகி உள்ளது.

வீடியோ வைரலானவுடன், ஏலியன்கள் தொடர்பான ஊகங்களும் இணையம் முழுக்க பரவின. "மியாமி மாலில் வேற்றுகிரகவாசிகள் நடமாடியதாக பரவும் வதந்திகள் உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இவ்வளவு போலீஸை நான் ஒரே இடத்தில் பார்த்ததில்லை.. அங்கே எதோ ஒரு சம்பவம் நடந்து உள்ளது" என்று ஒரு X பயனாளி பதிவிட்டுள்ளார்.

சர்ச்சை: அதே சமயம் அங்கே 50 இளைஞர்கள் சேர்ந்து கலவரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த கலவரம் குறித்தும் உறுதியான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை. அங்கே வானத்தில் விளக்குகள் இங்கும் அங்கும் நகரும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி இணையத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

அந்த வெளிச்சம் என்ன? அது ஏலியனா? உண்மையில் ஏலியன் பூமியை விசிட் செய்ததா என்ற கேள்விகள் இணையத்தை உலுக்கி உள்ளன.

அமெரிக்கா ஏற்கனவே ஒப்புக்கொண்டது: ஏலியன்கள் பற்றி புகார்கள் வைக்கும் பலர் இதை பற்றியும் புகார் வைப்பது உண்டு. மனித சமூகம் கடந்த சில நூற்றாண்டுகளாகவே வேற்றுகிரக வாசிகள் குறித்த தீவிர ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தது தொடங்கி தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வரை அனைத்துமே வேற்றுகிரக வாசிகளை தேடும் மனித ஆராய்ச்சியின் ஒரு அங்கம்தான்.

பரந்து விரிந்த விண்வெளியில் எங்காவது ஒரு மூலையில் ஒரு சின்ன உயிரினம் இருந்துவிடாதா என்று உலகின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எல்லோரும் தொடர் ஆய்வுகளை செய்து வந்தும் இதுவரை அவர்களால் எந்த ஒரு ஏலியனையும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏலியன்கள் என்று வந்துவிட்டாலே உடனே பறக்கும் தட்டும் குறித்தும் மக்கள் பேசுவார்கள். உலகம் முழுக்க யுஎப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள், பறக்கும் சாதனங்கள் குறித்து மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. வித்தியாசமான பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு.

யுஎப்ஓ: கடந்த 2020ம் வருடம் வரை அமெரிக்கா இந்த யுஎப்ஓ குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை இந்த தட்டுகளை மக்கள் பார்த்ததை மறுத்து வந்த அமெரிக்கா கடந்த 2020ம் வருடம் இப்படி தட்டுகள் பறந்தது உண்மைதான் என்று முதல்முறை ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு, யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) குறித்த வீடியோக்களை பகிர்ந்தது.

இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது. யுஎஃப்ஓ எனப்படும் அடையாளப்படுத்த முடியாத பறக்கும் பொருள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் கூட இது வேற்றுகிரக வாசிகளுடையது என்று பென்டகன் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் அவை தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், பென்டகன் இதை பற்றி விசாரிப்பதற்காக கடந்த 2019ம் வருடம் டாஸ்க் போர்ஸ் குழு அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+