இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைந்த மனைவி? வியட்நாமில் நடந்த பரபரப்பு சம்பவம்.. வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

ஹனோய்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் மேக்ரானுடன் வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் தான் விமானத்தில் இருந்து இறங்கும்போது இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் மனைவி பிரிஜிட் மேக்ரான் அறைந்ததாக வீடியோ பரவி வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் உள்ளார். இவர் தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இமானுவேல் மேக்ரானுடன் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் சென்றுள்ளார்.

did-france-president-emmanuel-macron-slapped-by-his-wife-at-hanoi-airport-in-vietnam

தற்போது இமானுவேல் மேக்ரான் வியட்நாமில் உள்ளார். நேற்றைய தினம் வியட்நாமுக்கு அவர் வந்திறங்கினார். இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

அதாவது இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் மேக்ரானுடன் சிறப்பு விமானத்தில் வியட்நாமுக்கு சென்றார். வியட்நாம் தலைநகர் ஹனோயில் விமானம் தரையிறங்கியது. இமானுவேல் மேக்ரானின் விமானத்தின் கதவு திறந்தது. உள்ளே இருந்து மனைவி பிரிஜிட் மேக்ரானுடன், இமானுவேல் மேக்ரான் வெளியே வர தயாராகி இருந்தார்.

இந்த வேளையில் இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மனைவி பிரிஜிட் மேக்ரானின் முகம் வீடியோவில் தெரியவில்லை. விமானத்தில் கதவுகள் அதனை மறைத்துள்ள நிலையில் அவரது கை ஆக்ரோஷமாக இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைவது போல் அந்த வீடியோ உள்ளது.

மேலும் இமானுவேல் மேக்ரான் அதனை வெளிக்காட்டாமல் விமானத்தின் கதவின் வழியாக வெளியே உள்ளவர்களை நோக்கி கையை அசைக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதோடு இமானுவேல் மேக்ரான் மீது அவர் மனைவி கோபமாக இருப்பதை அந்த வீடியோவை உற்றுக்கவனித்தால் தெரியும். அதாவது பொதுவாக தலைவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது மனைவியுடன் கைகோர்த்தபடி விமானத்தில் இருந்து இறங்குவார்கள்.

நேற்றைய தினம் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் மேக்ரானிடம் கைகோர்க்க கையை நீட்டுவார்.ஆனால் மனைவி பிரிஜிட் மேக்ரான் அதனை கண்டுக்கொள்ளாமல் விமான படிக்கட்டில் இறங்கி வருவார். இதனை பார்க்கும்போது இருவருக்கும் இடையே பிரச்சனை உள்ளது வெட்ட வெளிச்சமாகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி பிரான்ஸ் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிசி அரண்மனை சார்பில் தந்த விளக்கத்தில், ‛‛கணவரும், மனைவியும் நீண்ட பயணத்தை தொடங்குகின்றனர். இது செல்ல சண்டை'' என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இமானுவேல் மேக்ரானின் விவகாரம் இணையதளங்களில் தொடர்ந்து விவாதமாகி வருகிறது.

தற்போது வியட்நாமில் இருக்கும் இமானுவேல் மேக்ரான் அடுத்ததாக இந்தோனேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்ல உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+