ஐன்ஸ்டீன் தலையை பிளந்து.. மூளை திருடி, 240 துண்டா வெட்டிய வினோதம்! காரணத்தை கேட்டால் மிரண்டு போவீங்க
நியூஜெர்சி: உலகில் இயற்பியல் துறைக்கு மிகப் பெரிய பங்காற்றியவர்களில் முக்கியமானவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நவீன உலகை வடிவமைப்பதில் அவருக்கு மிக முக்கிய பங்கு இருந்து. ஆனால், இதே ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ஒரு காலத்தில் திருடப்பட்டது உங்களுக்குத் தெரியுமா.. யார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையைத் திருடியது.. எதற்காக இப்படிச் செய்தார்கள் என்பது குறித்து நாம பார்க்கலாம்.
இந்த உலகில் வாழ்ந்த தலைசிறந்த அறிவியல் ஆராய்ச்சிகளில் ஒருவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற இவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக E= mc2 என்ற இவரது சார்பியல் கோட்பாடு (theory of relativity) உலகை புரட்டிப்போட்டுள்ளது என்று சொல்லலாம். தற்போதும் கூட நவீன இயற்பியலின் இரண்டு தூண்களில் ஒன்றாக இந்த சார்பியல் கோட்பாடு இருக்கிறது. இப்படி உலகை மாற்றும் பல மூளையில் உதித்துள்ளது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
20ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராக இவர் இருக்கிறார். பிரிட்டன் நாட்டில் 1879ம் ஆண்டு பிறந்த இவர், தனது வாழ்நாளில் கடைசி 20 ஆண்டுகள் அமெரிக்காவிலேயே வாழ்ந்தார். அறிவியலுக்கு மிகப் பெரிய பங்களிப்பைக் கொடுத்த இவர் 1955ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி உயிரிழந்தார். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
அப்போது தான் அந்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது அதே மருத்துவமனையைச் சேர்ந்த நோயியல் நிபுணர் தாமஸ் ஹார்வி என்பவர் உயிரிழந்த ஐன்ஸ்டீன் சடலத்தின் மண்டையை ஓபன் செய்து மூளையைத் திருடியிருக்கிறார். இது எதுவும் தெரியாமல் பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு ஐன்ஸ்டீன் குடும்பத்தினர் வழக்கம் போல அவரது சடலத்தை வாங்கி சென்று எரியூட்டியுள்ளனர்.
மூளை திருட்டு:
அதற்கு மறுநாள் தான் நியூயார்க் டைம்ஸ் இதழில் ஐன்ஸ்டீன் மூளை ஆராய்ச்சி நோக்கங்களுக்காகத் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது. இதைப் படித்ததும் ஐன்ஸ்டீன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் ஐன்ஸ்டீன் தனது மூளை அல்லது உடல் ஆய்வு செய்யப்படுவதை விரும்பவில்லை.. அவரை யாரும் கடவுள் போலப் பிரார்த்தனை செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளார். இதனால் தான் இறந்த பிறகு உடலை எரியூட்டி, சாம்பலை ரகசியமாகக் கரைத்துவிட வேண்டும் என்று அவர் எழுதி வைத்துவிட்டே போய் இருக்கிறார்.
ஆனாலும், யாருக்கும் தெரியாமல் மூளையைத் திருடிய ஹார்வி, அதைப் பாதுகாத்து வந்துள்ளார். ஐன்ஸ்டீன் மூளையைப் பல பக்கங்களில் இருந்தும் போட்டோ எடுத்த அவர், மூளையை 240 துண்டுகளாக வெட்டி ஆய்வு செய்துள்ளார். இந்தச் சம்பவம் அப்போது பேசுபொருள் ஆகவே, ஐன்ஸ்டீனின் மகன் ஹான்ஸ் ஆல்பர்ட்டிடம் அறிவியல் நலனுக்காக மட்டுமே ஆய்வு செய்வேன் எனச் சொல்லி அனுமதி வாங்கியுள்ளார்.
23 ஆண்டுகள் 240 துண்டுகள்:
இதனால் அந்த மருத்துவமனையில் ஹார்வி வேலையை இழந்தார். இருப்பினும், ஐன்ஸ்டீன் மூளையை எடுத்துக்கொண்டே அவர் அங்கிருந்து கிளம்பினார். அடுத்த 23 ஆண்டுகளுக்கு அவர் எங்கிருந்தார் என்பதே பலருக்கும் தெரியவில்லை. இருப்பினும், 240 துண்டுகளாக வெட்டப்பட ஐன்ஸ்டீனின் மூளையை வைத்து ஆய்வுகளை மட்டும் அவர் தொடர்ந்தார். ஒரு வழியாகச் செய்தியாளர் ஒருவர் ஹார்வியை தேடிக் கண்டுபிடித்து பேட்டி எடுத்துள்ளார். முதலில் அவர் பேச மறுத்தாலும், பிறகு ஐன்ஸ்டீன் மூளை குறித்துக் கூறியுள்ளார்.
ஆய்வுகள்
ஐன்ஸ்டீன் மூளையை எடுத்து வந்ததை ஒப்புக்கொண்ட ஹார்வி, அதை வைத்து இத்தனை காலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐன்ஸ்டீன் இறந்து சுமார் 30 ஆண்டுகள் கழித்து 1985ம் ஆண்டு ஐன்ஸ்டீன் மூளை தொடர்பான தனது ஆய்வுகளைத் தொகுத்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஐன்ஸ்டீன் மூளையில் நியூரான்கள் மற்றும் க்ளியல் ஆகிய இரண்டு வகையான உயிரணுக்களின் அசாதாரண விகிதங்கள் அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து மேலும் ஐந்து ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் ஐன்ஸ்டீனின் மூளையில் உள்ள செல்கள் மற்றும் மூளையின் வடிவம் குறித்த தகவல்கள் இடம்பெற்று இருந்தது. இதில் கடைசி ஆய்வு 2014ல் வெளியானது. இருப்பினும், இந்த ஆய்வு முடிவுகளை அனைத்து தரப்பினரும் ஏற்கவில்லை. ஐன்ஸ்டீன் ஆற்றலை இது குறைத்துமதிப்பிடும் வகையில் இருப்பதாக ஒரு தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications