பாம்பை வெட்டி சமைத்த சமையல்காரர் – உயிரற்ற பாம்பின் தலையால் கடி வாங்கி பரிதாப பலி!
பெய்ஜிங்: சீனாவில் வெட்டிய பின்னரும் உயிருடன் இருந்த பாம்பு ஒன்று கடித்ததில் சமையல்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம்புக் கறிக்குப் பெயர் போன சீனாவில் இந்த நூதன சம்பவம் நடந்துள்ளது. நாகபாம்பு கடித்து உயிரை விட்டவர் பெயர் பெங்பாங் ஒரு சமையல்காரர். அங்குள்ள ஒரு ஓட்டலில் பாம்பு கறி சமைத்தார்.
அதற்காக இந்தோனேசியா மற்றும் சீனா கலப்பின நாகப்பாம்பின் தலையை வெட்டி துண்டாக்கி விட்டு அதன் உடல் பாகத்தின் கறியை எடுத்து உணவாக சமைத்தார்.
துண்டிக்கப்பட்ட பாம்பின் தலையை 20 நிமிடம் கழித்து குப்பை கூடையில் வீச சென்றார். அப்போது அந்த பாம்பின் தலை எதிர்பாராத விதமாக அவரை கடித்தது.
இதனால் பாம்பின் விஷம் அவரது தலைக்கு ஏறியது. மயங்கி விழுந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் அந்த ஓட்டலில் பாம்பு கறி சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் மரண பயத்தில் அலறியடித்தபடி ஓட்டலை விட்டு ஓட்டம் பிடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுபோன்ற சம்பவம் எப்போதும் நடந்தது இல்லை. வழக்கத்துக்கு மாறாக நடந்துள்ள இச்சம்பவம் ஒரு விபத்துதான் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் துயரத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications