'அமெரிக்காவின் தெருக்கள் குப்பைக் கூளங்களாக மாறிவிட்டன'.. விவாதமாகிய தீபாவளி கொண்டாட்டம்.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் தீபாவளியைக் கொண்டாடிய பிறகு தெருக்களில் குப்பைகளை வீசிவிட்டுச் சென்ற சில இந்தியர்களின் செயலுக்கு கடும் கண்டனங்களை அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களே தெரிவித்து வருகிறார்கள். இதனால் உலக அளவில் இந்தியாவின் நற்பெயர் பாதிக்கப்படுவதாகக் கூறுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்கள்.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது இந்தியாவில் உள்ளது போலவே பட்டாசுகளை பொதுவெளியில் பல இந்தியர்கள் வெடித்தார்கள். அப்படி வெடித்த போது உருவான ஏராளமான காகிதங்கள் உள்ளிட்ட குப்பைகள் சாலைகளில் அப்படியே கிடந்தது. தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் குப்பைகளை அகற்றாமல் விட்டதால், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட பொதுப் பணியாளர்கள் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

Diwali American indian

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் பொது இடங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார். அவர் தனது பதிவில் கூறுகையில், "அமெரிக்காவின் தெருக்களில் இந்தியர்கள் செய்துள்ள இந்தக் குப்பைக் கூளங்களைப் பாருங்கள்!"

அமெரிக்காவின் நியூஜெர்சியில் இந்தியர்கள் தீபாவளியைக் கொண்டாடிய பிறகு, தெருக்களில் சிதறிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காகத் தீயணைப்புப் படையினர் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்தக் காட்சி குடிமைப் பொறுப்புணர்வு குறித்த முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது. ஒரு கொண்டாட்டத்துக்குப் பிறகு, அதில் பங்கேற்றவர்கள் தங்களுடைய குப்பைகளைத் தாங்களே அகற்றிக்கொள்ளாமல், ஏன் பொதுப் பணியாளர்கள் அதைச் சுத்தம் செய்ய விட்டுவிட வேண்டும்?

வெடிக்காத பட்டாசுப் பெட்டிகள், பட்டாசுக் காகிதங்கள் மற்றும் இதர குப்பைகளைப் பொது சாலைகளில் ஒருபோதும் சிதறிக் கிடக்க விடக்கூடாது.

இந்தியாவாக இருந்தாலும் அமெரிக்காவாக இருந்தாலும், பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களை மதிப்பதும், நாம் உருவாக்கும் குப்பைகளை நாமே அகற்றுவதும் அடிப்படையான பொறுப்பாகும்.குடிமைப் பொறுப்புணர்வுடன் இணைந்திருக்காவிட்டால், கலாசாரப் பெருமையால் மட்டும் எந்தப் பயனும் இல்லை." என்று காட்டமாக கூறியுள்ளார்.

இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "அமெரிக்காவின் தெருக்கள் குப்பைக் கூளங்களாக மாறிவிட்டன! இதுதான் தீபாவளிக் கொண்டாட்டமா? அருவருப்பாக இருக்கிறது. இந்தக் கோமாளிகள் உலகிற்கு இந்தியாவைப் பற்றிய என்ன மாதிரியான பிம்பத்தை உருவாக்குகிறார்கள்? குறைந்தபட்சம் நாகரிகமான சமூகத்தில் பின்பற்ற வேண்டிய அடிப்படை ஒழுக்கத்தையாவது கடைப்பிடியுங்கள். இவ்வாறு நடந்துகொண்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்." என்று கூறியுள்ளார்.

மூன்றாவது நெட்டிசன் கூறுகையில், "ஒரு பெரிய நிகழ்ச்சிக்குப் பிறகு அதைச் சுத்தம் செய்ய ஒரு துப்புரவு நிறுவனத்தை நியமிக்கலாமே? அமைப்பாளர்களால் ஏன் இந்த அடிப்படை விஷயத்தைக் கூட செய்ய முடிவதில்லை? அதுவும் மிகவும் படித்த, உயர்கல்வி தகுதி பெற்றவர்கள்தான் அங்குக் குடியேறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. அரசியல் சூழல் சரியில்லாத இந்த நேரத்தில், தீவிர வலதுசாரிகள் உங்களைக் குற்றம் சாட்டக் காரணம் தேடிக் கொண்டிருக்கும் போது, ஏன் நீங்களாகவே அவர்களிடம் அதற்கான வாய்ப்பை தூக்கிக் கொடுக்கிறீர்கள்? இது ஒரு எளிமையான அடிப்படை அறிவு இல்லையா?" என்று கூறியுள்ளார்.

நான்காவது நெட்டிசன் கூறுகையில், "குடிமைப் பொறுப்புணர்வு குறித்த கருத்தில் நான் உடன்படுகிறேன். இருப்பினும், அமெரிக்கர்களும் தங்களுடைய பல்வேறு திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின்போது சாலைகளில் குப்பைகளையும் கழிவுகளையும் வீசுகின்றனர். அமெரிக்கர்கள் எங்கு சென்றாலும் தூய்மையைப் பேணுபவர்கள் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி இந்தியர்கள் மீது வெறுப்பை உருவாக்க வேண்டாம்." என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐந்தாவது நெட்டிசன் கூறுகையில், "இந்த அபத்தமான செயல்களைத் தடுப்பதற்கான சிறந்த வழி, கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அந்த இடத்தை விட்டுச் செல்வதற்கு முன்பு தாங்களே குப்பைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதுதான். இல்லையெனில், விதிகளை மீறியதற்காகக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்ட பொதுவான பட்டாசு வெடிக்கும் இடங்களைத் தவிர, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வேறு எங்கும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகின்றன." என்று கூறியுள்ளார். மக்களே உங்கள் கருத்துக்கள் என்ன என்பதை இந்த பதிவில் கூறுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+