ஒபாமாவின் காபி எப்படி இருக்கும்?: ஜோக்கடித்து பிரச்சனையில் சிக்கிய இஸ்ரேல் அமைச்சரின் மனைவி

Subscribe to Oneindia Tamil

ஜெருசலம்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் காபி பற்றி தெரியுமா என்று மொக்கை ஜோக்கடித்து மன்னிப்பு கேட்டுள்ளார் இஸ்ரேலிய உள்துறை அமைச்சர் சில்வன் ஷாலோமின் மனைவி.

இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் சில்வன் ஷாலோமின் மனைவி ஜூடி ஷாலோம் நிர்-மோசஸ். அவர் ட்விட்டரில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பற்றி ஜோக் ஒன்றை வெளியிட்டார்.

'Do u know what Obama Coffee is?' Israeli minister's wife in trouble after crass Obama joke

ஒபாமாவின் காபி பற்றி உங்களுக்கு தெரியுமா? அது கருப்பு மற்றும் வீக்கானது என்று ட்வீட் செய்தார். அவரது ட்வீட்டை பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்ததால் அதை அழித்துவிட்டார்.

அதன் பிறகு ஜூடி ட்விட்டரில் ஒபாமாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அதிபர் ஒபாமா, நான் கேள்விப்பட்ட ஜோக்கை எழுதியிருக்கக் கூடாது. இனம், மதத்தை தாண்டி எனக்கு மக்களை பிடிக்கும்.

யாரோ என்னிடம் கூறிய முட்டாள்தனமான ஜோக் அது. நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஜூடி.

இஸ்ரேலில் அதிகம் விற்பனையாகும் எடியட் அஹாரோனட் எனும் நாளிதழை வெளியிடும் மோசஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜூடி. அவர் ரேடியோவில் வாராந்திர நிகழ்ச்சியை நடத்துவதுடன் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+