அது ஏன்.. ரொம்ப தூரத்தில் உள்ள மருத்துவமனையில் ஆபரேஷன் பண்ணிக்கிட்டார் கிம்.. என்ன காரணம்?
பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தலைநகர் பியாங்கியாங்கில் உள்ள மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல் தொலைதூரத்தில் உள்ள ஹுயாங் சான் மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்த பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
Recommended Video
கிம் ஜாங் உன் கடந்த சில நாட்களாக பொது இடங்களில் தலை காட்டாமல் உள்ளது அமெரிக்க உளவுத் துறையை சந்தேகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கிம்மிற்கு உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து டெய்லி என்கே என் கிம் ஜான் உன்னிற்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அவர் தொலைதூரத்தில் உள்ள ஹுயாங் சான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன், அதாவது தலைநகர் பியாங்கியாங்கில் மருத்துவமனைகள் இருக்கும் போது அங்கு அறுவை சிகிச்சை செய்தது ஏன் என்பது குறித்து தகவல்களை டெய்லி என்கே வெளியிட்டுள்ளது.

குடும்பம்
ஹுயாங் சான் மருத்துவமனை கிம் குடும்பத்திற்காகவே ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அதாவது கிம்மிற்கு கடந்த 2014-ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் இந்த மருத்துவமனையில் நிறைய மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது கடந்த 1994-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அதாவது கிம்மின் தாத்தா கிம் சங் இறப்பிற்கு பிறகு தொடங்கப்பட்டது.

வில்லா
இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டதற்கான பின்னணி என்னவெனில், கிம்மின் தாத்தாவுக்கு 1994 ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹுயாங் சான் வில்லாவில் தங்கியிருந்தார். அப்போது அங்கு கடும் மழை பெய்ததால் ஹெலிகாப்டர் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதையடுத்து அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.

புவியியல் அமைப்புகள்
அப்போதுதான் ஹுயான் சாங்கில் ஒரு மருத்துவமனை இருந்திருந்தால் தனது அப்பாவை காப்பாற்றியிருக்கலாமே என கிம்மின் அப்பா கவலைப்பட்டார். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் உருவானதுதான் தற்போதைய ஹுயான் சாங் இதய மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையை அமைப்பதற்கு புவியியல் அமைப்புகளும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

பாதுகாப்பு
பியாங்கியாங்கில் மருத்துவமனை அமைத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். இதே தொலைதூரத்தில் மருத்துவமனையை ஏற்படுத்தினால் தனியுரிமை காக்கப்படும். வெளியுலக பார்வையிலிருந்தும் மறைந்து காணப்படும். மருத்துவமனையின் இருப்பிடம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் பியாங்யாங்கிற்கு அருகில் ஹுயாங் சான் இருப்பதால் அங்கு அனுமதி என்பதை தடை செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமானது.

விபரீதம்
வடகொரியாவை ஆளும் தலைவருக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்தாலும் மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தக் கூடும். இந்த மருத்துவமனை குறிப்பாக இதய நோய்க்கான சிறப்பு வசதிகளை கொண்டுள்ளது. ஜப்பான், ஜெர்மனியில் இருந்து சிறந்த உபகரணங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். அவர்கள் ஹுயான் சானில் வசித்து வந்தாலும் அவர்களது அடையாள அட்டையில் அவர்கள் பியாங்கியாங்கி ஜங் மாவட்டத்தில் குடியிருப்பவர்களாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்டியோ
கிம்மிற்கு இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கிமி மான் யோ மருத்துவமனையை சேர்ந்தவராவர். வடகொரியால் இந்த மருத்துவமனை இதய பிரச்சினைகளை சிறப்பாக கையாள்கிறது. கிம் மான் யோ மருத்துவமனையில் கார்டியோ வாஸ்குலர் துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் ஓராண்டிற்கு பிறகு ஜெர்மனியில் பயிற்சி பெறுகிறார்கள். அது போல் கிம்மிற்கு சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்களும் கார்டியோ வாஸ்குலர் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் என அந்த நாளிதழ் கூறுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications