வீட்டுக்கு ஒரு விமானம்.. வீதி முழுதும் பார்க்கிங் செய்யும் கிராம மக்கள்.. ஏன் வைத்திருக்கிறார்கள்?
கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள கேமரான் ஏர்பார்க் கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறார்களாம்.
அந்த காலத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கால்நடைகளாகவும் மாட்டு வண்டிகளிலும் சென்று வந்தனர். நாளடைவில் பொது போக்குவரத்து, சைக்கிள், ஆட்டோ ரிக்ஷா, கார் என போக்குவரத்து வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.

ஒவ்வொரு வீட்டிலும் சைக்கிள் இருந்த காலம் போய் டூவிலர்கள் வந்தன. தற்போது அவையும் போய் வீட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு காராவது இருக்கிறது. பக்கத்து கடைக்கு போக வேண்டுமானால் கூட காரில்தான் பயணிக்கிறார்கள்.
காற்று மாசு, போக்குவரத்து பாதிப்பு என இருந்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரே இடத்திற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களில் வருகிறார்கள். சரி விஷயத்திற்கு வருவோம். அமெரிக்காவில் ஒரு கிராமத்தில் வீட்டிற்கு ஒரு விமானம் இருக்கிறதாமே தெரியுமா? நிச்சயமாகத்தான் சொல்கிறோம்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கேமரான் ஏர்பார்க் கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக விமானங்களை பயன்படுத்துகிறார்களாம். இந்த கிராமத்தில் வேலைக்கு செல்லவும் அலுவலகத்திற்கு செல்லவும் விமானத்தில்தான் பயணிக்கிறார்களாம். அந்த தெருவை கழுகு பார்வையில் பார்த்தால் விமான நிலையம் போல் காட்சியளிக்கிறது.
விமானம் வைத்திருக்க விமான ஓட்டிகளுக்கான லைசன்ஸ் மற்றும் விமானத்தை இயக்குவது குறித்த விவரங்களை தெரிந்தவர்கள் மட்டுமே விமானம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த கேமரான் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற விமானிகளாக இருக்கிறார்கள்.
இவர்களுடன் மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களும் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் 1963 கட்டமைக்கப்பட்டது. இங்கு மொத்தம் 124 வீடுகள் உள்ளன. விமானங்களை தங்கள் வீடுகளுக்கு முன்பாக தரையிறக்கவும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு எளிதாக செல்லவும் 100 அடி அகலத்திற்கு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்கா விமானங்களின் செயல்பாட்டை ஊக்குவித்தது. இந்த நிலையில்தான் இந்த விமான நிலையங்களை ஓய்வு பெற்ற ராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமான பூங்காவாக மேம்படுத்த அந்த நாட்டின் விமான போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதனால்தான் வீட்டிற்கு ஒரு விமானம் வைத்திருக்கிறார்கள்.
விமானங்களை வாடகைக்கும் கொடுக்கிறார்களாம். யாருக்காவது கற்று கொடுக்க வேண்டுமானால் அதையும் கட்டணத்திற்கு கற்று கொடுக்கிறார்கள்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications