வெளியே கால் வைத்தாலே மொத்தமா உறைஞ்சு போவீங்க.. கொதிக்கும் நீர் கூட நொடியில் உறையும் வினோத நகரம்
மாஸ்கோ: உலகிலேயே மிகவும் குளிரான நகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா.. இந்த நகரில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் -42°C வரை செல்லும். இங்கு ஆடைகளை வெளியே ஒரு சில நொடிகள் வைத்தாலே அது கெட்டியான இரும்புக் கம்பி போல மாறிவிடும். காரும் கூட முழுமையாக உறைந்துவிடுமாம். இந்த நகரம் எங்கே இருக்கிறது.. இங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போது இந்தியாவில் குளிர்காலம் நிலவுகிறது. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் வெப்ப நிலை கடுமையாகக் குறைந்துள்ளது. பெங்களூரில் 10 டிகிரிக்கு கீழ் கூட போய்விட்டது. ஆனால், உலகிலேயே மிகக் குளிரான நகரம் எது என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? அங்கு நிலவும் குளிர் உடன் ஒப்பிடும்போது இங்கு நிலவுவது எல்லாம் குளிரே இல்லை என சொல்லலாம்.

யாகுட்ஸ்க்
அங்குக் குளிரைத் தாங்கும் ஆடை இல்லாமல் வெளியே கால் வைத்தாலே மனிதர்களே உறைந்துவிடும் அளவுக்கே குளிர் இருக்கும். அப்படி உச்சத்தில் குளிர் இருக்கும் நகரம் தான் ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள யாகுட்ஸ்க்.
குளிரில் இந்த யாகுடஸ்க் நகரம் தான் உலகிலேயே முதலிடத்தில் நிற்கிறது. சுமார் 3.55 லட்சம் மக்கள் இந்த நகரில் வசிக்கிறார்கள். இங்கு ஆண்டு முழுவதும் பெரும்பாலும் குளிர்காலமே நிலவுகிறது. இந்த ஊரில் இருக்கும் மக்கள் சூரியனைப் பார்ப்பதே அதிசயம் தானாம். அந்தளவுக்குக் குளிர் இருக்கும். உரிய பாதுகாப்பு உடை இல்லாமல் இங்குள்ள வெப்பநிலையை மனிதர்களால் தாங்கவே முடியாது.
மைனஸ் 42 டிகிரி வெப்பம்
யாகுட்ஸ்க் மக்களின் அன்றாட வாழ்க்கை குறித்து வெளியான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த நகரில், கொதிக்கும் நீர் கூட சில நொடிகளில் உறைந்துவிடுவதை அந்த வீடியோ காட்டுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வெப்பம் குளிராக இருக்கும். அப்போது வெப்பம் சராசரியாக -42°Cஆக இருக்குமாம். தண்ணீர் ஜீரோ டிகிரியில் உறைந்துவிடும். ஆனால், இங்கு அதை விட மிகக் கடுமையான குளிர் நிலவுகிறது.
இந்த நகருக்கு ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் சூரிய ஒளி கிடைத்தாலே பெரிது என்ற நிலையே இருக்கிறது. அந்த இக்கட்டான சூழலைச் சமாளித்தே இங்கு மக்கள் வசிக்கிறார்கள். இங்கு நீங்கள் உங்கள் ஆடைகளை வெளியே போட்டால் அது கெட்டியான இரும்பு தகட்டைப் போல மாறிவிடும். காரை வெளியே ஆஃப் செய்து நிறுத்தினால் குளிரில் இஞ்சின் மொத்தமாகப் போய்விடும். அந்தளவுக்கு மோசமான சூழல் தான் அங்கு இருக்கும்.
This is the coldest place on earth.
— Living Tricks (@LivingTricks_) December 19, 2025
Even boiling water freezes here ❄️
In Yakutsk, Russia, the air gets colder than a freezer. pic.twitter.com/Rovdwh9SNU
அதீத குளிர்
கடந்த 1891ம் ஆண்டு யாகுட்ஸ்கில் நகரில் -64.4°C ஆகும். இதுதான் மக்கள் வாழக்கூடிய நகரில் பதிவான மிகக் குறைந்த வெப்ப நிலையாகும். மேலும், இங்கு இறைச்சிக் கடைகள், மீன் கடைகளில் அவை இயற்கையாகவே உறைந்திருக்கும். உலகில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளை விட இங்கு இயற்கையாகவே வெப்பம் குறைவு என்பதால்.. வெளியே வைத்தாலும் இது நாள் கணக்கில் கெட்டுப் போகாமல் இருக்கும். வெளியே பழங்கள் எதாவது வைத்தாலும் அது நொடியில் உறைந்து கெட்டியான பொருளாக மாறிவிடுமாம்.
மேலும், இங்குக் காய்கறிகள் கிடைப்பதும் ரொம்ப கடினம். காய்கறிகள் இங்கு வளர்க்க முடியாது. வேறு பகுதிகளில் இருந்து தான் எடுத்து வர முடியும். அதையும் கூட உறைந்துவிடாமல் பாதுகாப்பது கடினம். எனவே, இங்கு இறைச்சி தான் எப்போதும் முக்கிய உணவாக இருக்கிறது. இறைச்சி பல நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதால் மக்கள் இறைச்சியையே தினசரி உணவாகச் சாப்பிடுவார்களாம்.
எங்கே அமைந்துள்ளது
யாகுட்ஸ்க் உலகிலேயே மிகக் குளிரான நகரம் எனப்பட்டாலும், இது வடதுருவத்திற்கு மிக அருகில் இல்லை. சைபீரியாவில் அமைந்துள்ள யாகுட்ஸ்க்கில் சைபீரியன் ஹை ஏற்படும். இதனால் இந்நகரம் மிகக் குறைவான சூரிய ஒளியையே பெறுகிறது. மேலும், யாகுட்ஸ்க் Permafrost எனப்படும் நிரந்தரமாக உறைந்திருக்கும் நிலப்பரப்பின் மீது கட்டப்பட்டுள்ளது. இதுவே இங்குக் கடுமையான குளிர் நிலவ காரணமாகும்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications