உலகிலேயே விலை உயர்ந்த தண்ணீர்.. வெறும் 750 மில்லி பாட்டிலின் விலை எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சுவா: உலகிலேயே தண்ணீர் மிகவும் விலையுயர்ந்ததாக கருதப்படுகிறது. இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

மனிதன் உயிர் வாழ அத்தியாவசியத் தேவை தண்ணீர் என்கிறோம். உணவு இல்லாவிட்டாலும் தண்ணீரை அருந்தியும் சிலர் உயிர் வாழ்ந்து வருவதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளை படித்து வருகிறோம்.

Do you know the worlds most expensive water in the world?

தண்ணீர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. ஆனால் இந்த தண்ணீர் இன்று பாட்டில்களில் அடைக்கப்பட்டு காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பலர் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

நீரின்றி அமையாத உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு

என நீரின் பெருமையை வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பொருள் யாதெனில் நீர் இல்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் நிலை பெற்று வாழ முடியாது. அந்த நீரை உலகத்திற்கு வழங்குகிற மழை இல்லையென்றால் இவ்வுலகில் எந்த ஜீவராசிகளும் வாழ்ந்திட முடியாது என்பதே ஆகும்.

அத்தகைய இன்றியமையாத நீர் விலை மதிப்பில்லாத ஒன்று. ஆனால் அந்த நீரே உலகில் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது என்றால் நம்புவீர்களா! ஆம்! அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிபுடோ எ மோடிக்லியானி (Acqua di Cristallo Tributo a Modigliani) என்ற நிறுவனத்தின் தண்ணீர்தான் விலையுயர்ந்ததாக கருதப்படுகிறது.

இது ஒரு பாட்டிலின் விலை ரூ 45 லட்சமாகும். 2010 ஆம் ஆண்டில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்த நீரின் அளவு இடம்பெற்றுள்ளது. இந்த தண்ணீர் பல கோடீஸ்வரர்களால் நாடு முழுவதும் குடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தண்ணீரின் விலை இத்தனை அதிகமாக விற்பதற்கு ஒரு காரணமும் உள்ளது. அதாவது இந்த பாட்டில் நீரில் 750 மில்லி தண்ணீரில் 5 கிராம் 24 கேரட் தங்கம் கலக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் அதிக காரத்தன்மையுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்கிறார்கள்.

ஒவ்வொரு பாட்டில் நீரும் பூமியின் 3 வெவ்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு நன்னீர் ஊற்றில் இருந்தும் ஃபிஜி நாட்டில் ஒரு நீருற்றில் இருந்தும் ஐஸ்லாந்தில் இருக்கும் பனிக்கட்டி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஆகிய மூன்றும் இதில் கலக்கப்பட்டு இந்த தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது.

சாதாரண குடிநீரை விட இந்த நீரை குடித்தால் அதிக ஆற்றல் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. Acqua di Cristallo Tributo a Modigliani என்ற பிராண்ட் பெர்னாண்டோ அல்டாமிரானோவால் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த நீரின் விலையை பார்க்கும் நெட்டிசன்கள், தாகம் தீர்க்கத்தானே தண்ணீர், தற்பெருமைக்காக அல்லவே, இயற்கை வலியது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+