மீனுக்கும் மீனுக்கும் கசமுசா.. தண்ணிக்குள்ளே ஒரே டிஷ்யூம் டிஷ்யூம்.. ஒரே வீடியோவில் கிறங்கிய இணையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. நெட்டிசன்களை ஈர்த்திருக்கும் இந்த வீடியோ, நேற்று முதல் இணையத்தில் பலரால் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது. அத்துடன் மீன்களை பற்றிய சுவாரஸ்யமும் கூடி வருகிறது.

மீன்களை பற்றின எத்தனையோ வினோத தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தவாறே உள்ளன.. இப்படித்தான் கடந்த மாதம், அமெரிக்காவின் புளோரிடாவின் தம்பா விரிகுடா பகுதியில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

fish fighting video

அங்கே சில காலமாகவே, இரவு நேரங்களில் மட்டும் ஏதோ ஒரு வினோத சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது.. குறிப்பாக குளிர் காலங்களில், விடாமல் இரவு நேரத்தில் சத்தம் கேட்டுள்ளது.. அதாவது, குழந்தைகள் தூங்க முடியாத அளவுக்கு அந்த சத்தம் இருந்ததாம். தினமும் இப்படி சத்தம் வந்ததால், அங்கிருந்த மக்கள் புகார் தந்துள்ளனர்..

ஆய்வாளர்கள்: எனவே, உள்ளூர் நிர்வாகமும் ஆய்வாளர்களை அழைத்துக் கொண்டு, சத்தத்திற்கான காரணத்தை ஆராய்ந்தது.. அப்போதுதான், இந்த சத்தத்தை எழுப்பியது மீன்கள் என்று கண்டறிந்தார்கள்.

குளிர்காலத்தில், இனச்சேர்க்கை நேரங்களில் மீன்கள் இப்படி சத்தத்தை கிளப்புவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.. இந்த சத்தம் 165 டெசிபல் வரை இருந்துள்ளது.. பிளாக் டிரம் என்ற மீன்கள் கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும்.. இந்த மீன்கள்தான், உறவு கொள்ளும்போது, வினோத சத்தத்தை எழுப்பியது தெரியவந்தது.

இப்போது இன்னொரு விநோத சம்பவம் நடந்துள்ளது.. இந்த நாட்டில் நடந்தது என்று தெரியவில்லை.. ஆனால், இந்த வீடியோ கடலில் எடுக்கப்பட்டுள்ளது. இதில், மீன்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொள்வது பதிவாகியிருக்கிறது.

கருப்பு மீன்: அதாவது, முதலில் கருப்பு கலரில் மீன் ஒன்று வேகமாக வந்து, அங்கிருந்த இன்னொரு மீனை சீண்டுகிறது.. உடனே 2 மீன்களும் சண்டை போட்டுக் கொள்கின்றன..

இதில் என்ன விசேஷம் என்றால், சண்டை போடும்போது, இந்த மீன்களின் நிறம் கருப்பு & வெள்ளை என மாறி கொண்டேயிருக்கிறதாம்.. ஒன்றுடன் ஒன்று சளைக்காமல் சண்டை போடுவதும், பயந்து ஓடுவதும், பிறகு விரட்டி வந்து பாய்வதும் என வீடியோ பரபரப்பாக ஓடுகிறது.. "மாறுவேடப்போர்" என்ற தலைப்பில் இந்த வீடியோ சோஷியர் மீடியாவில் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கிறது.

ஆச்சரியம்: சண்டை என்றாலே மீன்களுக்கு வெறித்தனம் வந்துவிடுமாம்.. குறிப்பாக சியாம் என்ற மீன்கள் சண்டைக்கு பெயர்போனவை.. இந்த சியாம் ஆண் மீன், இன்னொரு ஆண் மீனைக் கண்டுவிட்டால் உடனே போருக்கு கிளம்பி சென்றுவிடுமாம்.. இந்த இனத்தின் ஆண் மீன்கள் தங்களுக்குள்ளேயே போரிட்டு இறப்பவை.

ஒரே தொட்டியில் இரண்டு மீன்களை விட்டால், இரண்டுமே முட்டி மோதி சண்டை போடும்.. இறுதியில் பலவீனமான மீனை மற்றொரு பலமான மீன் கொன்றுவிடும். இந்த போர்குணத்தால்தான், இந்த மீன்களுக்கு சண்டை மீன்கள் என்றே பெயர் வந்தாம்.

சண்டைகள்: பொதுவாக, எந்த மீன்களாக இருந்தாலும், தங்களுடைய எல்லைக்குள் புதிதாக ஏதாவது மீன் வந்துவிட்டால், இன்னொரு மீன் பாய்ந்து வந்துசண்டை போடுமாம்.. அதேபோல, ஒரு மீனின் ஜோடியுடன், இன்னொரு மீன் ஜோடி சேர வந்தால், அப்போதும் சண்டை நடக்குமாம்.. சில சமயம், உயிர் போகும் வரைகூட இந்த மீன்கள் சண்டையிட்டு கொள்ளுமாம். இது கடலில் மட்டுமல்ல, மீன்கள் எங்கிருந்தாலும் இந்த குணத்தில்தான் இருக்கும் என்கிறார்கள்.

ஆக, எல்லை சிக்கல், உரிமை சிக்கல், உறவு சிக்கல்கள் என அனைத்து பிரச்சனைகளுக்கும், இந்த மீன்களும் விதிவிலக்கல்ல போல..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+