Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விஐபி" புள்ளிகள் யார்.. பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து.. அதென்ன "வாயூரிசம்".. பெரிய்ய நெட்வொர்க்

பெண்கள் குளிப்பதை 30 வருடமாகவே மறைந்திருந்து வீடியோ எடுத்த கும்பல் ஒன்று கைதாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: பெண்கள் குளிப்பதை 30 வருடமாகவே ஒரு கும்பல் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளது.. மிகப்பெரிய நெட்வொர்க்காக செயல்படும் இந்த கும்பல் பற்றிய பல பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

உலக நாடுகளிலேயே ஜப்பானில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்... ஜப்பானியர்கள்தான் அதிக ஆயுட்காலம் கொண்ட நபர்களாகவும் இருக்கிறார்கள்.

மாரடைப்பு, மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், இதய நோய் போன்றவை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அங்கு குறைவாக இருக்கிறது.

 சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி

உடல் எடையை பராமரிப்பது, அதற்கேற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுவது, அதிலும் சிவப்பு இறைச்சியை குறைவான அளவிலேயே உட்கொள்வது, மீன் வகைகள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது, போன்றவைகள் காரணமாக சொல்லப்பட்டு வருகின்றன.. அதேபோல, ஜப்பானியர்கள் தங்களை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள்.. இதற்கு பெரும்பாலானோர் நாடுவது வெந்நீர் ஊற்றுகளைதான்.. ஜப்பானின் தனிச்சிறப்புகளில் ஒன்றுதான் இந்த வெந்நீர் ஊற்றுகள். இந்நாட்டின் வருமானத்தில் பெரும்பங்கை வெந்நீர் ஊற்றுகள் தருகின்றன.

 வெந்நீர் ஊற்றுகள்

வெந்நீர் ஊற்றுகள்

காரணம், வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இந்த வெந்நீர் ஊற்றை தேடி ஜப்பானுக்கு மக்கள் வருகிறார்களாம்.. வழக்கமாக, ஜப்பானில் நிறைய எரிமலைகள் உண்டு.. ஊற்றுகளில் பெருக்கெடுக்கும் நீரானது, இந்த எரிமலை குழம்புகளின் வெப்பம் சுமந்து வெளிப்படும்போது அதுவே வெந்நீர் ஊற்றுகளாக வெளிவருகின்றன. இந்த ஊற்றுகளில் குளிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.. காரணம், எரிமலை குழம்பில் தாதுப்பொருட்கள் ஏராளமாக தேங்கியிருக்கின்றன..

 விஐபி பிள்ளைகள்

விஐபி பிள்ளைகள்

இந்த ஊற்றுகளில் குளிக்கும்போது, ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் அதிகமாகவே கிடைப்பதாக சொல்கிறார்கள். அந்த அளவுக்கு மருத்துவ குணாதிசயங்கள் அடங்கியதுதான் இந்த ஊற்றுகள்.. மருத்துவ பலனை முழுமையாக பெறுவதற்காக, ஆடைகளை அகற்றியே, இந்த வெந்நீர் ஊற்றுகளில் குளிப்பார்கள்.. ஆண்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியாக குளிப்பதற்கு இடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.. கேமரா எதையும் இங்கே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. அந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு இருந்தும், இங்கே நுழைந்துள்ளது அந்த சபலிஸ்ட் கும்பல்..

வாயூரிசம்

வாயூரிசம்

இவர்களுக்கு வேலை என்ன தெரியுமா? அங்கே குளிக்க வரும் பெண்களை ஒளிந்திருந்து பார்ப்பதுதான்.. அதன்பெயர் "வாயூரிசம்" என்பார்கள்.. அதாவது, பாலியல் சார்ந்த பிறரின் நடவடிக்கைகளை மறைந்திருந்து பார்ப்பதன் வாயிலாக இன்பம் அடைவதற்கு பெயர்தான் வாயூரிசம் என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்ட கும்பல் ஒன்று இந்த வெந்நீர் ஊற்றுகளில் வட்டமடித்து கொண்டு வந்துள்ளது. கையில் சிறிய அளவிலான கேமராவை வைத்து கொள்வார்களாம்.. சிறிய அளவிலான கேமரா என்றாலும், தொலைதூரத்தில் உள்ளதையும் படம்பிடிக்கும், தொழில்நுட்பங்கள் வாய்ந்தது..

 வெந்நீர் ஊற்றுகள்

வெந்நீர் ஊற்றுகள்

அங்கு குளிக்க வரும் பெண்களை, இந்த கும்பல் இப்படித்தான் கேமராவில் படம் எடுத்துள்ளது.. அந்த வீடியோ எடுத்து வைத்து கொண்டு, தங்களுக்குள் பார்ட்டி வைத்து, அந்த பார்ட்டில், வீடியோக்களை வெளியிட்டு பார்த்து மகிழ்வார்களாம்.. இந்த விஷயத்தை அதிகாரிகள் மோப்பம் பிடித்துவிட்டனர்.. மொத்தம் 16 பேரை தட்டி தூக்கி உள்ளனர்.. கைதான பிறகுதான் தெரிந்தது, அந்த 16 பேரில், டாக்டர்கள், ஆபீஸர்களும் அடக்கமாம்.. மிகப்பெரிய நெட்வொர்க்காக இவர்கள் செயல்பட்டு வருவதால், மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்கிறார்கள்.

 பெரிய வீட்டு பிள்ளைகள்

பெரிய வீட்டு பிள்ளைகள்

ஆனால், எல்லாருமே பெரிய வீட்டு பிள்ளைகள்தானாம்.. சமீபத்தில், வழக்கு தொடர்பாக, அங்குள்ள ஒரு ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தியபோதுதான், இந்த வெந்நீர் ஊற்று அக்கப்போர் தெரியவந்துள்ளது. இந்த கும்பலின் தலைவன் பெயர் சைட்டோ.. இந்த வெந்நீர் ஊற்றுகளில், சின்ன வயதிலேயே திருட்டுத்தனமாக போட்டோ எடுக்க துவங்கி உள்ளான் சைட்டோ.. அதுவே பின்னர் பழகியும் விட்டது.. சோஷியல் மீடியாவில் தன்னை போலவே ரசனைகள் கொண்ட வாயூரிசம் நட்புக்களுடன் அறிமுகமாகி, இந்த திருட்டுத்தனத்தை விரிவுபடுத்தி வந்துள்ளனர்..

 சைட்டோ கும்பல்

சைட்டோ கும்பல்

அங்கு குளிக்க வரும் பெண்களை, இந்த கும்பல் இப்படித்தான் கேமராவில் படம் எடுத்துள்ளது.. அந்த வீடியோ எடுத்து வைத்து கொண்டு, தங்களுக்குள் பார்ட்டி வைத்து, அந்த பார்ட்டியில், வீடியோக்களை வெளியிட்டு பார்த்து மகிழ்வார்களாம்.. இந்த விஷயத்தை அதிகாரிகள் மோப்பம் பிடித்துவிட்டனர்.. மொத்தம் 16 பேரை தட்டி தூக்கி உள்ளனர்.. கைதான பிறகுதான் தெரிந்தது, அந்த 16 பேரில், டாக்டர்கள், ஆபீஸர்களும் அடக்கமாம்.. மிகப்பெரிய நெட்வொர்க்காக இவர்கள் செயல்பட்டு வருவதால், மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+