6 மனைவிகள்.. ஒரே படுக்கை பகிர்வு இப்படிதான்.. குபீரை கிளப்பிய இளைஞர்.. சாருக்கு உடம்பெல்லாம் மச்சம்
பிரஸ்ஸிலா: பல பெண்கள் புடைசூழ, விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார் உர்சோ என்ற நபர்.. யார் இவர்? என்ன காரணம்?
பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் பெயர் ஆர்தர் ஓ உர்சோ .. பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ நகரில் இவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் 9 மனைவிகள் இருக்கிறார்கள்.. முதல் மனைவி பெயர் லுவானா கஜகி.. அதற்கு பிறகு நிறைய பெண்களுடன் உர்சோவுக்கு தொடர்பு இருந்துள்ளது.

இதில் என்ன ஒரு சிக்கல் என்றால், அந்த பெண்களை எல்லாம் உர்சோவுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது.. இருந்தாலும் எல்லாரையுமே திருமணம் செய்ய முடியாது என்பதால், அவர்களில் 8 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, கல்யாணமும் செய்து கொண்டார்.. மொத்தம் 9 மனைவிகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை ஆரம்பித்தார்..
அன்பு: அன்பை சுதந்திரமுடன் கொண்டாட வேண்டும் என்று உர்சோ நம்புகிறார். அதுமட்டுமல்ல, ஒரே நேரத்தில், ஒரு துணையுடன் வாழ்வது என்பதற்கு எதிரான போராட்டத்தின் அடையாளம் என்றும் உர்சோ நம்புகிறாராம்.
ஆனாலும் உர்சோ திருப்தியாகவில்லை.. 10வதாக ஒரு கல்யாணம் செய்யலாமா? என்று யோசித்தார்.. 9 மனைவிகள் இருந்தபோதும், இவருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே இருக்கிறாராம்.. "9 மனைவிகளுடனும் எப்படி சண்டை வராமல், ஒன்றாக குடித்தனம் நடத்தறீங்க?" என்ற கேள்வியை உர்சோவிடம் பலரும் கேட்டிருக்கிறார்கள்.

மனைவிகள்: அதற்கு உர்சோவோ சொல்கிறார், "மனைவிகளில் ஒருவர் என் மீது எப்படி அன்பு செலுத்துகிறார் என்பது பற்றியெல்லாம் மற்ற மனைவிகளுக்கு கவலை ஏற்பட்டதே இல்லை.. ஆனால், பரிசு தரும்போது மட்டும், அவர்களுக்குள் பொறாமை வந்துவிடுகிறது.. ஆரம்பத்தில், தாம்பத்யத்திற்கான நேர அனுமதி கிடைத்த பிறகே அது நடந்தது...
இந்த நேரத்தில் இவருடன் உறவு கொள்வதென, "டைம்டேபிள்" போட்டுதான் தாம்பத்யத்தில் ஈடுபட்டு வந்துள்ளேன்.. அப்படி இருந்தும் நிறைய சிக்கல்கள் வந்தன.. ஒரு சந்தோஷமே இல்லாமல், ஏதோ டைம்டேபிள் போட்டுவிட்டதற்காகவே தாம்பத்யத்தில் ஈடுபடுகிறோமோ என்று நினைத்தேன்.. சிலசமயம், ஒருவரை நினைத்து கொண்டே இன்னொருவருடன் தாம்பத்யத்தில் ஈடுபட வேண்டிய நிலைமையும் வந்துவிட்டது. அதனால் டைம்டேபிள் முறையே வேஸ்ட் ஆகிவிட்டது" என்கிறார் உர்சோ.
டைம்டேபிள்: இதற்கு பிறகு, 9 பேரில் ஒரு மனைவியான அகத்தா என்பவர், உர்சோவை விட்டு பிரிவது என முடிவு செய்தார். இதற்கு காரணம், உர்சோ தனக்கு மட்டும்தான் சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்..
இந்த விஷயத்தை அகத்தா, உர்சோவிடம் சொன்னதற்கு, "என்னது ஒரே மனைவியா? நோ சான்ஸ்" என்று அதிர்ச்சியுடன் மறுத்துவிட்டாராம்.. அதற்கு பிறகு, அக்கத்தாவை போலவே, மற்ற மனைவிகளுக்கும் "பொசசிவ்" வந்துவிட்டது.. இறுதியில், 4 மனைவிகள் விவாகரத்து பெற்று சென்றுவிட்டார்கள்..

காதல் மாளிகை: இதற்கு பிறகு, 10வதாக இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார் உர்சோ. "என்னுடைய பெரிய வீட்டில், பெரிய கட்டில் உண்டு, அந்த படுக்கை நிரம்பி இருக்க வேண்டும்" என்றும் காரணம் சொல்கிறார். இப்போதைக்கு 6 பெண்களோடு ஒரே வீட்டில் குடித்தனம் செய்து வருகிறார் உர்சோ.
அதிலும், தன்னுடைய மனைவிகளுக்காகவே, 800 சதுர அடியில் மாளிகையை கட்டியிருக்கிறார்.. ஏகப்பட்ட வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டியிருக்கிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 6 மனைவிகளுடன் தாராளமாக படுக்க மிக பெரிய கட்டில் ஒன்றை இவரே டிசைன் செய்திருக்கிறார்.. 6 அடி நீளமும், 6 அங்குலமும் உள்ள இந்த கட்டிலில் அரை கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மனைவிகள்: தன்னுடைய 6 மனைவிகளுக்காகவும் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று சொல்லும் உர்சோ, தன்னுடைய பங்களாவுக்கு, "காதல் மாளிகை" என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்.. ஆனால், பிரேசில் நாட்டை பொறுத்தவரை, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் அங்கீகரிக்கப்படவில்லை.. இருந்தாலும், ஆறு மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உர்சோ பகிர்ந்து வருகிறார்..
குழப்பம்: இதில் ஒவ்வொரு மனைவியுடனும் ஒவ்வொரு குழந்தையை பெற்றுக கொள்ள வேண்டும் என்பது இந்த கணவனின் ஆசையாம்.. ஆனால், இப்போது உர்சோவுக்கு மிக மிக முக்கியமான குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாம்.. அது என்னவென்றால், 6 பேரில் யாரை முதலில் கர்ப்பமாக்குவது என்பதே அந்த குழப்பமாம்????
இதெல்லாம் கேள்விப்பட்டு, ஒரே ஒரு கல்யாணத்துக்குகூட வழியில்லாமல் திண்டாடிவரும், நம்ம 90'கிட்ஸ்களின் காதுகளில் எக்கச்சக்கமாக "புகை" வந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications