உலக கோப்பை டீமில் இருந்த அப்பா.. மகள் "பலான" வெப்சைட் பிரபலம்.. காரணத்தை பாருங்க!
பிரபல கால்பந்து வீரர் மகள், ஆபாச இணையதள சேவை நிறுவனத்தில் உறுப்பினராக இணைந்திருக்கிறார்
ரியோடிஜெனிரோ: உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் ஒருவரின் மகள், ஆபாச இணையதள சேவை நிறுவனத்தில் இணைந்துள்ளது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. யார் அவர்? என்ன காரணம்?
அறிவியலும் தொழில்நுட்பங்களும், புதிது புதிதாக வளர வளர, அதனால், தாக்கங்களும், மாற்றங்களும் அதிகமாகவே நடந்துகொண்டிருக்கின்றன.. சில சமயம் இது அபாயத்திற்கும் இட்டு செல்கிறது. சில சமயம் நல்வழிக்கும் காரணமாகிவிடுகிறது.
சோஷியல் மீடியாவில் இன்று ஏராளமான வெப்சைட்களும், யூடியூப் சேனல்களும் புற்றீசல்கள்போல் கிளம்பி வருகின்றன.. உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் இதுபோன்ற வெப்சைட்களில், ஆபாசத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடிய வெப்சைட்களும் சில உண்டு.

ஒன்லி ஃபேன்ஸ்
அப்படிப்பட்ட ஒன்றுதான் 'ஒன்லி ஃபேன்ஸ்' என்று சொல்லப்படும் இணையதள சேவை நிறுவனம்.. பிரிட்டனை சேர்ந்த இந்த நிறுவனம் பாலியல் தொழிலாளர்களை பயன்படுத்தி ஆபாச படங்களை உருவாக்குகிறது.. இந்த படங்களை ஒன்லி ஃபேன்ஸ் வெப்சைட்டில் பதிவேற்றுகிறது. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தி இந்த படங்களை பார்த்துக்கொள்ளலாம்... பணத்திற்கு ஏற்ப சேவை மாறுபடும். அதாவது கூடுதலாக பணம் செலுத்துபவர்களுக்கு இந்த ஆபாச படம் லைவாக காட்சிப்படுத்தப்படும். இது கடந்த 2016ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்படி ஒரு ஆப் பிரபலமாக காரணமே கொரோனா தொற்று பரவல்தான்..

பூரா ஆபாசம்
அது லாக்டவுன் நேரம் என்பதால், ஏராளமான பெண்கள் இந்த வெப்சைட்டில் இணைந்து, தங்களுடைய ஆபாச வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்... இதற்காக கணிசமான அளவில் பணத்தையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.. இந்த நிறுவனம் குறித்து சமீபத்தில் பிபிசி நிறுவனம், ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் சில அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளிவந்தன. அதாவது இந்த இணையதளத்தில் 18 வயதுக்கு குறைவான பெண்களும் தங்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இதில் வெளியிட்டிருக்கிறார்களாம்.. மொத்த ஆபாச வீடியோக்களில் இது 3ல் 1 பங்கு என்கிறார்கள்.. பிரிட்டனில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம்தான், இந்த வெப்சைட்டை உருவாக்கவும், அதை நோக்கி அவர்களை நகர வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

பியூட்டி பார்லர்
இந்த ஒன்லி பேன்ஸ் எனப்படும் வெப்சைட்களை ஏராளமான பிரபலங்கள் பயன்படுத்துவது ஆச்சரியத்தை தந்துள்ளது.. ஈக்வடார் நாட்டில் கடந்த மாதம் ஒரு சம்பவம் நடந்தது.. அவர் ஒரு ஆபாச பெண்மணி.. ஈக்வடார் நாட்டின் மாடல் அழகியும்கூட.. மரியா பெர்னாண்டா வர்காஸ் என்பது அவரது பெயர்.. "மாஃபர்" என்று அவரை ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.. ஒரு பிரபலமான பியூட்டி பார்லர் ஒன்றையும் அங்கு நடத்தி வருகிறார்.. அதுமட்டுமல்ல, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பத்திரிகை துறையில் இவர் பட்டம் பெற்றவர்.. இவர் திடீரென அரசியலில் குதித்துவிட்டார்.. சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மேயராகி உள்ளார்.

குமட்டும் ஆபாச
ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பெண், அரசியலுக்கு வருவதா? என்று பலரும் இவரை கிண்டல் செய்தார்கள்.. அதிர்ச்சியும் அடைந்தனர்.. ஆபாச படங்களில் நடிக்க மட்டுமே லாயக்கு என்று விமர்சித்தனர்.. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத மரியாவுக்கு பெருத்த நம்பிக்கையாக இருந்தது இந்த ஒன்லி ஃபேன்ஸ் என்ற ஆபாச வெப்சைட்தான்.. இந்த ஆபாச வெப்சைட்டில் தன்னுடைய வீடியோக்கள் போட்டோக்களை மட்டுமே வைத்து, தேர்தல் நிதியை திரட்டினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த நிதியை கொண்டே, போட்டியிட்டு வெற்றி பெற்று அனைத்து விமர்சனங்களையும் நொறுக்கி தள்ளினார்.. அரசியலில் போட்டியிட்டு மேயர் ஆனதுமே, அந்த வீடியோக்களை பதிவிட்டு வந்த தன்னுடைய ஆப் அக்கவுண்ட்டையும், ஒன்லி பேன்ஸ் வெப்சைட்டில் இருந்து நீக்கிவிட்டு, முழுக்க முழுக்க மக்கள் பணியில் இறங்கிவிட்டார்..

ONLY FANS
மரியாவை கிண்டலடித்து கொண்டிருந்தவர்கள் இப்போது வாயடைத்து போயுள்ளார்கள். இங்கு இப்படி என்றால், இதே ஒன்லி பேன்ஸ் வெப்சைட்டை வைத்து வேறு ஒரு பிரபலம், ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.. பிரேசிலின் புஃட்பால் ஜாம்பானான ரொமாரியோவின் மகள்தான் அவர்.. டேனியர் ஃபவட்டோ என்பது அவரது பெயர்.. 25 வயதுதான் ஆகிறது.. பிரபல வீரர் ரொமாரியோவின் மகளான டேனியல் ஃபவட்டோ, ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலமாவார்... இவருக்கு இன்ஸ்டாவில் சுமார் 2.5 லட்சம் ஃபாலோவர்கள் இருக்கின்றனர்.. இவர் திடுதிப்பென்று "ஒன்லி ஃபேன்ஸ்' இணையதள சேவை நிறுவனத்தில் இணைந்திருக்கிறார்... இந்த 'ஒன்லி ஃபேன்ஸ்' இணையதள சேவை நிறுவனம் ஆபாச படம் மட்டுமல்லாது இசைக்கலைஞர்களையும் உருவாக்குவது தொடர்பான வீடியோக்களையும் ஒளிபரப்பி வருகிறது.

பவர் ஸ்டார்
தான் ஏன், இந்த வெப்சைட்டில் இணைந்தேன் என்று டேனியல் ஃபவட்டோ ஒரு விளக்கமும் தந்துள்ளார்.. இவருக்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பு, பெண் குழந்தை பிறந்தது.. தான் முதன் முறையாக தாயாகிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ளவே இந்த இணையதளத்தில் சேர்ந்துள்ளதாக காரணம் கூறியுள்ளார்.. எல்லாரையும் போல இல்லாமல் இந்த வெப்சைட்டில் சிறந்த முறையில் "ஸ்பெஷலாக" தன்னுடைய பங்களிப்பை தருவேன் என்றும் காரணம் சொல்கிறார்.. இவர் சொல்லி உள்ள காரணங்களை எல்லாம் கேட்டு, அவரது ஃபாலோயர்ஸ்களே வாயடைத்து போயுள்ளார்களாம்..!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications