எபோலா காய்ச்சலுக்கு சோதனை அடிப்படையில் மருந்து கொடுக்கப்பட்ட லைபீரிய டாக்டர் மரணம்
மான்ரோவியா: லைபீரியாவில் எபோலா வைரஸ் தாக்கப்பட்ட 3 டாக்டர்களுக்கு சோதனை அடிப்படையில் இசட்மாப் என்ற மருந்து கொடுக்கப்பட்டது. அந்த மருந்து கொடுக்கப்பட்ட டாக்டர்களில் ஒருவர் மரணம் அடைந்தார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா உயிர்கொல்லி வைரஸ் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக லைபீரியாவில் தான் வைரஸின் தாக்கம் அதிகம் உள்ளது. எபோலா வைரஸ் தாக்கி மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, நைஜீரியா, லைபீரியா, சியர்ரா லியோனில் 1, 400க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் லைபீரி்ய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீபின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா எபோலா காய்ச்சலுக்கு தான் தயாரித்த இசட்மாப் என்ற மருந்தை அளித்தது. அந்த மருந்து சோதனை அடிப்படையில் லைபீரியாவைச் சேர்ந்த எபோலா வைரஸ் தாக்கிய 3 டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டது. மருந்து கொடுக்கப்பட்ட பிறகு அவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக லைபீரிய அரசு அறிவித்தது.
இந்நிலையில் இசட்மாப் மருந்து கொடுக்கப்பட்ட டாக்டர்களில் ஒருவரான ஆபிரகாம் போர்பர் ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்தார். மேலும் லைபீரியாவில் சேவை செய்த ஸ்பெயினைச் சேர்ந்த பாதிரியாரை எபோலா வைரஸ் தாக்கியது. அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
லைபீரியாவில் வேலை செய்த இரண்டு அமெரிக்க டாக்டர்களை எபோலா வைரஸ் தாக்கியது. இதையடுத்து அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட அவர்களுக்கும் இசட்மாப் மருந்து கொடுக்கப்பட்டது. அவர்கள் குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications