சிறையில் மரணத்தின் விளிம்பில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்.. புதினுக்கு எதிராக ஆவேசமடைந்த ஜோ பைடன்!
மாஸ்கோ: சிறையில் இருக்கும் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு உடல்நலம் பாதிக்கப்ட்டுள்ளதால் அவரை உடனயாக சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் குரல் எழுந்துள்ளது.
அலெக்சி நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எந்த நிமிடத்திலும் அவரது இதயத் துடிப்பு நிற்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அலெக்சி நவல்னிக்கு சிசிக்சை வழங்குவது குறித்து ரஷ்ய அரசு இதுவரை வாய் திறக்கவில்லை.

புதினை எதிர்த்த நவல்னி
எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி. இவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சித்து வந்தார். இதற்கிடையே கடந்த ஆண்டு அலெக்சி நவல்னிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நவல்னியை கொல்ல உணவில் விஷம் வைத்து விட்டதாக ரஷ்ய அரசு மீது குற்றச்சாட்டுகள் வந்தன. இதற்கு மத்தியில் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்த நவல்னி இந்த ஆண்டு ஜனவரி ரஷ்யா திரும்பினார்.

நவல்னி உடல்நிலை மோசம்
இதற்காகவே காத்திருந்த புதின் அரசு, நவல்னி மீதுள்ள பழைய வழக்களை தூசி தட்டி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அலெக்சி நவல்னியை விடுவிக்க கோரி அந்நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில் சிறையில் இருக்கும் அலெக்சி நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எந்த நிமிடத்திலும் அவரது இதயத் துடிப்பு நிற்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

சிறையில் இருந்து விடுவிக்கணும்
அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்ததால் அவரது கால்கள் மற்றும் கைகளில் உணர்வின்மை ஏற்பட்டுள்ளது. இதனால் அலெக்சி நவல்னியை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ரஷ்ய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அலெக்சி நவல்னியை உடனயாக சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்து அவருக்கு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் குரல் எழுந்துளளது.

ஜோ பைடன்! ஆவேசம்
நவல்னிக்கு சிகிச்சையை வழங்க வலியுறுத்தப்பட்டு வரும் சர்வதேச போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் குரல் கொடுத்துள்ளார். . அலெக்சி நவல்னி இருக்கும் நிலைமைக்கு ரஷ்ய அரசு நடந்து கொள்ளும் விதம் முற்றிலும் நியாயமற்றது என்று ஜோ பைடன்! கூறியுளளார். ஆனால் அலெக்சி நவல்னிக்கு சிசிக்சை வழங்குவது குறித்து ரஷ்ய அரசு இதுவரை வாய் திறக்கவில்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications