வயிறா இது.. அடேங்கப்பா எம்புட்டு ஆணி.. ஆடிப் போன டாக்டர்கள்
ஒருவரின் வயிற்றில் 122 ஆணிகளை டாக்டர்கள் அகற்றியிருக்கிறார்கள்.
Recommended Video

அடிஸ் அபாபா: கையில் என்ன கிடைக்கிறதோ அதையெல்லாம் எடுத்து வாயில் போட்டுக் கொண்ட ஒருவரை டாக்டர்கள் போராடி பிழைக்க வைத்துள்ளனர்.
எத்தியோப்பாவை சேர்ந்த ஒருவருக்கு மனநலம் சரியில்லை. 10 வருஷமாகவே மனநலம் பாதிக்கப்பட்டுதான் இருந்து வருகிறார். அதற்கு சிகிச்சையும் நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் கடந்த 2 வருஷங்களாக சரியாக ட்ரீட்மெண்ட் போவது கிடையாது, கொடுத்த மருந்து, மாத்திரைகளையும் சாப்பிடுவது கிடையாது. இதனை மற்றவர்களும் கவனிக்காமல் விட்டுவிட்டனர்.

வயிற்று வலி
அதனால் கையில் என்ன கிடைக்கிறதோ அதையெல்லாம் வாயில் எடுத்து போட்டு கொள்ள ஆரம்பித்துள்ளார் இவர். இதனால் சிறிது காலமாகவே வயிற்று வலி இருந்திருக்கிறது. தற்போது வலி அதிகமாகிவிடவும் அடிஸ் அபாபாவில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி சென்றிருக்கிறார்கள்.

122 ஆணிகள்
ஆனால் அவரை டெஸ்ட் செய்த பின்னர் அவரது வயிற்றில் ஏதோ இருக்கிறது என்று தெரியவந்தது. இதையடுத்து ஆபரேஷன் நடக்க ஆரம்பித்தது. அப்போது, டாக்டர்கள் அடைந்த ஷாக்கிற்கு அளவே இல்லை. காரணம், நோயாளி வயிற்றில் இருந்த ஆணிகளை கண்டு ஆடிப்போய் விட்டார்கள். ஒன்றிரண்டு இல்லை... 122 ஆணிகளை எடுத்தார்கள். எல்லாமே கிட்டத்தட்ட 10 செ.மீ. அளவு இருப்பவை.

கண்ணாடி துண்டுகள்கூட
நோயாளி தனக்கு எப்போதெல்லாம் பசிக்குமோ அப்போதெல்லாம் ஆணிகளை தேடி சாப்பிட்டு விட்டிருக்கிறார். கண்ணாடி துண்டுகளை கூட விட்டு வைக்கவில்லை. அதேபோல பல் குத்தும் குச்சியும் சேர்தே விழுங்கி இருக்கிறார். இவை எல்லாமே கூர்மையான பொருட்கள்தான்!! நோயாளிக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் டேவிட் இது பற்றி சொல்லும்போது, மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டதால், இப்படி ஆணிகளை சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்.

குணமாகிட்டு வருகிறார்
ஆணி, கண்ணாடி, என்று கூர்மையான பொருட்களை இப்படி விழுங்குபோது தண்ணி கூட குடிக்கவில்லை போலிருக்கு. நல்லவேளை, இவ்வளவு ஆணிகள், கண்ணாடி துண்டுகள் இருந்தும் வயிற்றில் எங்கும் குத்தி கிழிக்கவில்லை. ஒருவேளை குத்தியிருந்தால் பாதிப்பு பெரிதாக இருந்திருக்கும், உயிர்கூட போயிருந்திருக்கும். நல்லவேளை, இப்போ குணமாகிட்டு வருகிறார்" என்றார்.
ஆனி போய் ஆடி வந்தா டாப்புன்னு நம்ம ஊரில் சொல்வாங்க.. ஆனால் இவருக்கோ ஆணி உள்ளே போய் உயிரே போகும் அளவுக்கு போய் விட்டது!


Click it and Unblock the Notifications
