சர்வ நாசம்.. ஈரான் அணுசக்தி நிலையங்கள் பாதிப்பு? இஸ்ரேல் தாக்குதலால் நிலைமை மோசம்! மிக முக்கிய தகவல்
தெஹ்ரான்: ஈரான் நாட்டின் மீது யாருமே எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியது. ஈரான் நாட்டின் ராணுவ தளங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்குள்ள அணுசக்தி நிலையங்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது பதற்றமான சூழலே நிலவி வருகிறது. அங்கு இஸ்ரேல் - ஹமாஸ், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

பதற்றம்: இது ஒரு பக்கம் இருக்க இஸ்ரேல் ஈரான் இடையேயும் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த அக். 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. பெரியளவில் அந்த ஏவுகணை தாக்குதல் நடந்த நிலையில், நல்வாய்ப்பாக அதில் பெரிய பாதிப்பு இல்லை. இருப்பினும், அந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நிச்சயம் பழிவாங்கும் என்றே சொல்லப்பட்டது.
அதற்கேற்ப நேற்றைய தினம் ஈரான் மீது ஈரான் இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. குறிப்பாக அங்குள்ள ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்குள்ள அணுசக்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே இது தொடர்பாக இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அணுசக்தி நிலையங்கள்: ஈரானில் உள்ள ராணுவ தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பினர் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி கூறுகையில், "ஈரான் நாட்டில் உள்ள சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் தங்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
ஈரான் நாட்டின் ராணுவ தளங்களைக் குறிவைத்தே இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் எதுவும் சேதமடையவில்லை. இது போன்ற நேரங்களில் உலக நாடுகள் இடையே விவேகமும் கட்டுப்பாடும் அவசியம்.. மோதல் அதிகரித்தால் அது அணு மற்றும் கதிரியக்க பொருட்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும்" என்றார்.
மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது நிலைமை மோசமாகி வரும் நிலையில், அந்த பிராந்தியத்தில் உள்ள அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எந்தளவுக்கு முக்கியம் என்பதையே இது காட்டுகிறது.
கண்காணிப்பு அமைப்பு: IAEA எனப்படும் சர்வதேச அணுசக்தி முகமை என்பது ஐநா சபையின் கீழ் உள்ள சர்வதேச கண்காணிப்பு அமைப்பாகும்.. இது அணுசக்தியின் பாதுகாப்பு மற்றும் அமைதியான பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) உட்படச் சர்வதேச கட்டமைப்பின் கீழ் ஈரான் நாட்டில் அணுசக்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதை இது உறுதி செய்கிறது. இந்த அமைப்பின் அதிகாரிகள் ஈரானில் வழக்கமான கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். அந்த அமைப்பு சார்பிலேயே இப்போது ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டால் பரவாயில்லை.. இதற்கு ஈரான் பதிலடி தர, அதற்கு இஸ்ரேல் திருப்பி அடிக்க என்று தாக்குதல்கள் தொடர்ந்தால் அது நிச்சயம் பிராந்திய போரைக் கிளப்பிவிடும். இதனால் அணுசக்தி நிலையங்களுக்கும் கூட ஆபத்து ஏற்படலாம்












Click it and Unblock the Notifications