இதுதான் தந்திரம்.. ஏமாந்துடாதீங்க! ஏமாந்துடாதீங்க! ரஷ்யா பற்றி அமெரிக்கா கடும் வார்னிங்.. என்னாச்சு?
மாஸ்கோ: உக்ரைன் தலைநகரில் இருந்து ரஷ்யா படைகளை வெளியேற்றுவதை பார்த்து யாரும் ஏமாந்துவிட கூடாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் புதிய திருப்பமாக நேற்று அமைதி பேச்சுவார்த்தையில் முதல் கட்ட உடன்படிக்கைகள் சில எட்டப்பட்டன. அதன்படி உக்ரைன் நாடு தாங்கள் நடுநிலையாக இருக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தது.
இதன் அர்த்தம் உக்ரைன் எக்காரணம் கொண்டும் நேட்டோவில் இணையாது. மாறாக சில நாடுகளின் கூட்டமைப்பு இணைத்து உக்ரைனை பாதுகாக்கும்.

ரஷ்யா ஏற்றுக்கொண்டது
உக்ரைனின் இந்த பரிந்துரையை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. இதையடுத்து கீவில் இருந்து படைகளை வெளியேற்றுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதேபோல் செர்ணிஹிவ் பகுதியில் இருந்தும் படைகளை வெளியேற்றுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. காலையில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறி வருகின்றன.

வெளியேறும் படைகள்
ரஷ்ய டாங்கிகள் கீவில் இருந்து ரஷ்யாவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இன்னும் போர் முழுமையாக முடியவில்லை. இந்த நிலையில்தான் அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை நம்ப கூடாது என்று தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த செயல் மக்களை ஏமாற்றும் வகையில் இருக்கலாம். உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இருக்கலாம். கீவை ரஷ்யாவால் பிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

பென்டகன் மறுப்பு
அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனும் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உக்ரைன் தலைநகரில் இருந்து ரஷ்யா படைகளை வெளியேற்றுவது நம்பி ஏமாந்துவிட கூடாது. அவர்களின் தந்திரம் இது. இதை பார்த்து யாரும் ஏமாற கூடாது. அவர்கள் தங்கள் படைகளை வேறு இடங்களுக்கு அனுப்புகிறார்கள். உக்ரைனின் மற்ற இடங்களில் ரஷ்யா பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தலாம்.

அட்டாக் செய்யலாம்
ரஷ்யா மற்ற இடங்களில் மோசமாக தாக்கும். இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதேபோல் கீவிற்கான ஆபத்து ஓவர் என்றும் கூறி விட முடியாது. ரஷ்யாவால் கீவை பிடிக்க முடியவில்லை. இதனால் மற்ற நகரங்களை பிடிக்க ரஷ்யா நினைக்கும். ரஷ்யாவின் இந்த செயலை பார்த்து ஏமாந்துவிட கூடாது. ரஷ்யா ஏற்கனவே மற்ற நகரங்களில் தாக்குதல் நடத்தி வருவதை மறந்து விட வேண்டாம், என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications