நாளை அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் எம்.எஸ்.எஃப். மாநில மாநாடு
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவை நடத்தும் எம்.எஸ்.எஃப். மாநில மாநாடு மற்றும் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க கருத்தரங்கம் நாளை நடைபெறுகிறது.
அமீரக காயிதே மில்லத் பேரவை எம்.எஸ்.எஃப். மாநில மாநாடு மற்றும் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க கருத்தரங்கினை நாளை(19/09/2013) மாலை 7 மணிக்கு அபுதாபி எலக்ட்ரா சாலையில் அமைந்துள்ள இப்ராஹிமி ரெஸ்டாரன்ட் கான்பரன்ஸ் ஹாலில் நடத்துகிறது.
கருத்தரங்கிற்கு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமை வகிக்கிறார்.
காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 0502821852 / 050 5463510 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications