வைரல் ஆகும் "ரெய்சிங் டிரம்ப்".... புத்தகம் வெளியிடுகிறார் டிரம்ப்பின் முதல் மனைவி!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் மனைவி இவானா வெளியிடவுள்ள ''ரெய்சிங் டிரம்ப்'' என்ற புத்தகம் மிகவும் வைரல் ஆகியுள்ளது.
நியூயார்க் : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப் ''ரெய்சிங் டிரம்ப்'' என்ற புத்தகம் வெளியிடவுள்ளார். இந்தப் புத்தகம் வெளியாகும் முன்பே அமெரிக்காவில் மிகவும் வைரல் ஆகியுள்ளது. இந்தப் புத்தகத்தில் இவனா டிரம்ப் , தனது திருமண வாழ்க்கைக் குறித்தும் , அமெரிக்க அதிபர் டிரம்பின் நடத்தைகள் குறித்தும் எழுதியுள்ளதால் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபரின் முன்னாள் மனைவி இவானா டிரம்ப் ஆவார். சில வருடங்களுக்கு முன்பு டிரம்பிற்கும் இவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது. டிரம்ப் அதிபர் ஆவதற்கு முன்பே மிகவும் பிரபலமான நபராக இருந்ததால் இந்தச் சம்பவம் வைரல் ஆனது. மிகவும் புயலைக் கிளப்பிய இந்தச் சம்பவம் அமெரிக்கவின் அப்போதைய தலைப்புச் செய்தியானது .

இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் , மெலினா என்ற பெண்ணுடன் வாழத்தொடங்கினார் . தற்போது அதிபரின் முன்னாள் மனைவியான இவானா டிரம்ப் தனது திருமண வாழ்க்கை குறித்து புத்தகம் எழுதவுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து இந்தப் புத்தகத்தில் நிறைய தகவல்கள் எழுதப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் உடன் இவானா வாழ்ந்த வாழ்க்கை பற்றி இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டு இருப்பதால் இந்த புத்தகத்திற்கு " ரெய்சிங் டிரம்ப் '' என பெயர் வைத்துள்ளார் இவானா டிரம்ப். மேலும் அவர் இந்தப் புத்தகத்தில் " டிரம்ப் என்னை அடிமை போல் நடத்தினார். ராணுவ அதிகாரி போல் அவர் என்னிடம் செயல்பட்டார்'' என்றெல்லாம் எழுதியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மோசமான சில பழக்க வழக்கங்கள் , அவருக்கும் மற்ற பெண்களுக்கும் இடையேயான தொடர்பு என பல விஷயங்களை அவர் இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். வெளியாவதற்கு முன்பே இந்தப் புத்தகம் அமெரிக்காவில் வைரல் ஆகத் தொடங்கியுள்ளது. இந்தப் புத்தகம் அடுத்த வாரம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications